பெங்களூர்: பெங்களூரில் உள்ள பிரபலமான ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் மர்ம பொருள் வெடித்து நான்கு பேர் படு காயமடைந்தனர். இங்கு வெடித்தது வெடிகுண்டா அல்லது சிலிண்டரா என போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர் அருகே இந்திரா நகரில், ஒயிட் பீல்டு பகுதியில் 80 அடி சாலையில், ராமேஸ்வரம் கஃபே ஹோட்டல் உள்ளது. அந்தப் பகுதியில் பிரபலமானது இது. தென்னந்திய உணவு வகைகளுக்குப் பெயர் போன ஹோட்டல் இது. மாதம் ரூ. 5 கோடி வரை இங்கு வசூல் ஆகும் அளவுக்கு மிகப் பிரபலமான ஹோட்டலும் கூட. இந்த ஹோட்டலின் உரிமையாளருக்கு மறைந்த டாக்டர் அப்துல் கலாம் என்றால் மிகவும் பிடிக்குமாம். இதனால்தான் அவர் பிறந்த ராமேஸ்வரத்தின் பெயரை ஹோட்டலுக்கு வைத்தாராம்.
மிகச் சிறிய இடத்தில்தான் இந்த ஹோட்டல் நடந்து வருகிறது. இந்த ஹோட்டலில்தான் இன்று மர்மப் பொருள் வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு பெண் உட்பட 3 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை தொடர்ந்து வெடித்தது சிலிண்டரா அல்லது வெடிகுண்டா என போலீசார் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}