"உங்களுக்கெல்லாம் எதுக்கு மீசை".. பொட்டில் அடித்தாற் போல கேட்ட ப்ளூ சட்டை மாறன்!

Nov 20, 2023,08:10 PM IST

சென்னை: நடிகை திரிஷா விவகாரம் தொடர்பாக வாய் திறக்காமல் இருக்கும் ஹீரோக்களைப் பார்த்து உங்களுக்கெல்லாம் எதுக்கு மீசை என்று  காரித் துப்பாத குறையாக கேட்டுள்ளார் திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.


சினிமாப் படங்கள் குறித்த விமர்சனங்களை தனது யூடியூபில் போட்டு பிரபலமானவர் மாறன். இவர் பாராட்டிய படங்களை விட காரித் துப்பி கழுவி ஊற்றி வறுத்தெடுத்த படங்கள்தான் அதிகம்.. எந்தப் படத்தையும் விட மாட்டார்.. எந்த ஹீரோ என்றும் பார்க்க மாட்டார். மனசில் தோன்றுவதை பேசி விடுவார்.. நல்லா இருக்குன்னா இருக்கு.. இல்லாட்டி வச்சு செய்வார்.


ரஜினிகாந்த் முதல் அஜீத் வரை, சிம்பு முதல் தனுஷ் வரை ஒருத்தரையும் இவர் விட்டு வைக்கல.. இந்த நிலையில் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா குறித்துப் பேசிய ஆபாசமான பேச்சையும் ப்ளு சட்டை மாறன் கண்டித்துள்ளார்.




இந்த விவகாரம் தொடர்பாக பெண் பிரபலங்கள்தான் முதலில் வந்து கண்டித்தனர். ஹீரோக்கள் பெரிதாக யாரும் குரல் கொடுக்கவில்லை. லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கண்டித்துள்ளார். ஆனால் படத்தின் ஹீரோவான விஜய்யும் சரி, முக்கியப் பாத்திரத்தில் நடித்த அர்ஜூனும் சரி இதுவரை கண்டிக்கவில்லை.


மற்ற பெரிய நட்சத்திரங்களும் கூட இதுவரை யாருமே மன்சூர் அலிகான் பேச்சு தப்பு என்று சொல்லவில்லை. இதை தற்போது ப்ளூ சட்டை மாறன் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவீட்டில்,


த்ரிஷா குறித்து மன்சூர் பேசியதற்கு நடிககைகள் மட்டுமே கண்டனம் தெரிவித்துள்ளனர்‌. இயக்குனர்களில் கார்த்திக் சுப்பராஜ், லோகேஷ் போன்றோர் மட்டுமே பேசியுள்ளனர். முன்னணி நடிகர்கள் மற்றும் சீனியர் இயக்குனர்கள் அனைவரும் வாயில் கொழுக்கட்டையை வைத்துள்ளனர். 


இவர்களுடன் பல படங்களில் த்ரிஷா நடித்துள்ளார்.  ஆனால் ஒருவரும் வாய் திறக்கவில்லை. படத்தில் மட்டுமே பெண்களுக்காக புரட்சி வசனம் பேசுவார்கள் இந்த ஹீரோக்கள். சீனியர் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இன்னும் சுத்தம்.  உங்களுக்கு எல்லாம் எதுக்கு மீசை?  என்று கேட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.


மன்சூர் அலிகான் தனது பேச்சு குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால் தான் பேசிய வார்த்தைகள் எவ்வளவு தவறானது என்பதை உணர்ந்ததாக தெரியவில்லை. சினிமாவில் ரேப் காட்சிகளில் நடித்ததை ஏதோ நிஜத்திலேயே செய்தது போல பெருமையாக பேசுவது எந்த அளவுக்கு இழிவான செயல் என்பதை அவர் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.. யாராவது அவருக்கும் புரிய வைத்தால் நல்லது.. விஜயகாந்த் மட்டும் இப்போது நலமுடன் இருந்திருந்தால்.. நிச்சயம் மன்சூர் அலிகானை ஒரு வழி செய்திருப்பார்.. துரதிர்ஷ்டவசமாக அதற்கும் வழி இல்லாமல் போய் விட்டது.


நிறைய வில்லன் நடிகர்கள், நிஜ வாழ்க்கையில் ஹீரோக்களாக வலம் வருகிறார்கள்.. ஆனால் மன்சூர் அலிகான், நிஜத்திலும் வில்லனாக இருப்பது சோகமானது. திருந்துங்க சார்.. ப்ளீஸ்!

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்