தமிழகத்தில்.. அடுத்த 5 நாட்களுக்கு.. வெயிலும்  இருக்குமாம்.. மழையும் இருக்குமாம்.. வானிலை மையம்

Apr 16, 2024,04:40 PM IST
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் 22ஆம் தேதி வரை  ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த ஐந்து தினங்களில் தமிழகத்தில் வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கிடையே  மழையும் அவ்வப்போது எட்டிப் பார்த்து செல்கிறது. இன்று தமிழகத்தில் எட்டு இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெயில் கொளுத்தியது.

இந்த நிலையில் தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால் இன்று தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.  லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அந்த நேரத்தில் மீனவர்கள் யாரும் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




இது தவிர,வட தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவுமாம்.  தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் காற்றின் ஈரப்பதம் இருக்கக்கூடும். அப்போது அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இருக்கும் ஒரு சில இடங்களில் அசௌரிகம் ஏற்படலாம். வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடுமாம்.

சென்னையைப் பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36- 37 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக் கூடும் என அறிவித்துள்ளது.

நாளை மழை நிலவரம்:

நாளை அதாவது 17ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவக்கூடுமாம்.

18.4.2024 முதல் 22.4.2024 வரை:

தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான  மழையை எதிர்பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்