டெல்லி: டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் இ.ந்.தி.யா. கூட்டணி எம்.பிக்கள் அடுத்தடுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மணிப்பூர் விவகாரம் இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. இரு அவைகளிலும் வழக்கமான அலுவல்கள் நடைபெற முடியாத அளவுக்கு எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு அவையை முடக்கி விட்டன.
மணிப்பூரில் குக்கி இனத்தைச் சேர்ந்த இரு பெண்கள் பொது வெளியில் நிர்வாணப்படுத்தப்பட்டும், பலாத்காரமாக நடத்த��்பட்டும் கொண்டு செல்லப்பட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் பேசு பொருளானதால் பரபரப்பு கூடியது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியும் கருத்து தெரிவித்து இந்த சம்பவத்தைக் கடுமையாக கண்டித்திருந்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்டும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது. ஆனால் ஒரு நாள் கூட சபையை முழுமையாக நடத்த முடியவில்லை. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழு அளவில் போராட்டத்தில் குதித்துள்ளன. வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து விட்டு மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அவை கோரி வருகின்றன.
இதற்கிடையே, மணிப்பூர் விவகாரம் மட்டுமல்ல, ராஜஸ்தான், சட்டிஸ்கர், மேற்கு வங்காளத்திலும் நடந்த பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்துப் பேசலாம் என்று பாஜக தரப்பு வலியுறுத்தி வருகிறது. இதனால் இன்றும் இரு அவைகளும் முழுமையாக முடங்கிப் போயின.
இந்தப் போராட்டங்கள் தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு ஷிப்ட் ஆகியுள்ளன. தங்களது கோரிக்கையை வலியுறுத்தியும், மணிப்பூர் பாஜக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும் எதிர்க்கட்சிகளின் இ.ந்.தி.யா. கூட்டணி எம்.பிக்கள் பதாகைகளை ஏந்தியபடி காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதேபோல ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளைக் கண்டித்தும், ராஜஸ்தான் அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும பாஜக எம்.பிக்களும் காந்தி சிலை அருகே போராட்டம் நடத்தினர். இதனால் காந்தி சிலை பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.
இன்று முதல் நான் அரசியல் துறவறம் பூணுகிறேன்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
இருளை இருளால் விரட்ட முடியாது!
அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.. நடிகை ஜோதிகா பரபரப்பு பதிவு
நான் யாருக்கு என்னை நிரூபிக்க வேண்டும்.. என்னைக் குறை கூறுவது நியாயமா.. சோனம் வாங்சுக்
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
{{comments.comment}}