சுமை

Aug 28, 2026,04:41 PM IST

- ரா. பிருந்தா ஜெயந்தி, நெய்வேலி டவுன்ஷிப்


சுமையை சுமந்திட்ட சுந்தரனுக்கு 

சுமையே சுகமென சுகந்ததால் 

சுகத்தின் சுகந்தம் சுமந்திடாமல் 

சுந்தரமாய் சுந்தரனை சுதந்திரமாக்கியது 


சுந்தரியில்லாத சுகமே சுதந்திரமென்று 

சுமையையே சுதந்திரமில்லாது சுமந்திட்டு...

சுக்காகி சுண்டி 

சுகவீனனாகி...

சுமையான சுற்றமே சுளித்திட்ட பின்...


சுந்தரத்தமிழ் சுந்தரியை சுட்டுவிரலால் 

சுண்டியழைத்தே சுகம்தேடி சுவைப்பதால்

சுந்தரிகளின் சுகம் சுண்டைக்காயாகி...




சுகவீனனான சுந்தரமே சுகமென 

சுவையில்லாது சும்மாயிருந்திட்டு... சுமையைத்தாங்கி 

சுமந்திட்ட சுந்தரமான சுந்தரிகளுக்கு...

சூடரொளியாய் சூடர்விடும் 

சுந்தரிகளுமிருக்க...


சுகவீனனான சுந்தரன் சுந்தரியின் 

சுதந்திர சுகத்திற்கு சுருக்கிட்டு 

சுகமான சுந்தரம் சுதந்திரனாயிருக்க... 

சுந்தரர்களின் சுகத்திற்கேது சுமை?

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை

news

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?

news

US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!

news

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!

news

ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!

news

Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!

news

Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?

news

சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!

news

Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்