லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல முதலை நிபுணர், 40க்கும் மேற்பட்ட நாய்களை பலாத்காரம் செய்து அதை வீடியோவிலும் படமாக்கிய குரூர சம்பவம் அம்பலமாகியுள்ளது.
அந்த நபரின் பெயர் ஆடம் பிரிட்டன். இவர் பிரபலமான முதலை ஆய்வாளர். உயிரியல் நிபுணரும் கூட. பிபிசி, நேஷனல் ஜியாகிரபிக் சானல்களில் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் மிகவும் குரூரமான ஒரு செயலைச் செய்து சிக்கியுள்ளார் ஆடம் பிரிட்டன்.
இவர் மீது ஆஸ்திரேலியாவில் ஒரு புகார் எழுந்தது. அதாவது நாயுடன் இவர் பலாத்காரம் செய்த வீடியோ ஒன்று காவல்துறைக்குக் கிடைத்தது. இதையடுத்து அவரை ஆஸ்திரேலியா போலீஸார் விசாரித்தனர். அப்போதுதான் திடுக்கிடும் பல தகவல்கள் கிடைத்தன.
ஒரு நாய் இல்லை, 42 நாய்களை இவர் பலாத்காரம் செய்துள்ளார். இதற்காகவே ஒரு அறையை செட்டப் செய்து வைத்துள்ளார் இந்த நபர். நாய்களை பலாத்காரம் செய்வதை வீடியோவிலும் எடுத்துள்ளார். பின்னர் அதை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார். இதுதவிர குழந்தைகள் ஆபாச வீடியோக்களையும் இவர் வைத்திருந்ததும் தெரிய வந்தது.
கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்த அக்கிரமச் செயல்களில் ஆடம் பிரிட்டன் ஈடுபட்டு வந்துள்ளார். தனது வளர்ப்பு நாய்கள் மட்டுமல்லாமல், பிறருடைய நாய்களையும் கூட தூக்கிக் கொண்டு வந்து அவற்றையும் நாசம் செய்துள்ளார் பிரிட்டன்.
பக்கத்து வீட்டார் ஊருக்குப் போகும்போது அல்லது வெளியில் போகும்போது அவர்களை நாய்களை தானே பத்திரமாக பார்த்துக் கொள்வதாக கூறி தனது வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்து விடுவாராம் பிரிட்டன். அதன் பின்னர் தனது வக்கிரத்தை தீர்த்துக் கொண்டுள்ளார்.
இதற்காகவே ஒரு ஷிப்பிங் கன்டெய்னரை வாங்கி வைத்துள்ளார். அதை டார்ச்சர் அறை போல பாவித்து வந்துள்ளார். அதை டார்ச்சர் ரூம் என்றும் அவர் கோர்ட்டில் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.
மனிதத்தன்மையே சற்றும் இல்லாத ஆடம் பிரிட்டன் உயிரியல்துறையில் பிஎச்டி படித்தவர். சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியுள்ளார். இவர் மீதான வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. டிசம்பர் மாதம் இவருக்கு தண்டனை வழங்கப்படும்.
இவர் பலாத்காரம் செய்து சித்திரவதைக்குள்ளாக்கிய 42 நாய்களில் 39 நாய்கள் இறந்து விட்டன என்பதுதான் மிகப் பெரிய கொடுமை.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}