சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பொத்தூர் என்ற இடத்தில் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம் நடைபெறுகிறது. இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் உடன் வர சென்னை பெரம்பூரிலிருந்து அவரது உடல் பொத்தூர் எடுத்துச் செல்லப்பட்டது.
சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டுக்கு அருகே ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இதுவரை 11 பேர் சரணடைந்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக பெரம்பூர் மாநகராட்சி பள்ளிக்கூட வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை முதல் பல்வேறு தலைவர்களும் வந்து அஞ்சலி செலுத்தினர். பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவர் மாயாவதி, விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இயக்குநர் வெற்றி மாறன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கியது. ஆயிரக்கணக்கானோர் புடை சூழ ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூர் கொண்டு செல்லப்பட்டது. வழியில் மழை பெய்தபோதும் கூட கூட்டம் கொட்டும் மழையில் நனைந்தபடி சென்றது. முன்னதாக இதுகுறித்து ஆம்ஸ்ட்ராங் தரப்பு வழக்கறிஞர் ஆனந்தன் கூறுகையில், உடல் அடக்கம் தொடர்பாக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் தீர்ப்பளித்துள்ளார். அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில், 1 ஏக்கர் பரப்பிலான இடத்தில் உடல் நல்லடக்கம் நடைபெறவுள்ளது. இதற்கான அனுமதியைப் பெற்றுள்ளோம்.
நீதிபதி இதுகுறித்து பிறப்பித்த உத்தரவில், உடல் நல்லடக்கம் தொடர்பாக அரசு அனைத்து விதமான ஒத்துழைப்பையும் அளிக்க வேண்டும். இறுதி ஊர்வலம் செல்லும் 20 கிலோமீட்டர் தொலைவுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இறுதி ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெறுவதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும். அரசு மரியாதை குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.
பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் நினைவிடமோ அல்லது மருத்துவமனையோ அமைக்க திட்டமிட்டால் அரசை அணுகி உரிய அனுமதியைப் பெற்று மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளதாக தெரிவித்தார்.
இறுதிச் சடங்கையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பெரம்பூர் முதல் பொத்தூர் வரையிலான பாதை நெடுகிலும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
முதல் முறையாக.. சொன்ன நேரத்துக்கு முன்பே வந்து சேர்ந்த தவெக தலைவர் விஜய்!
தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டில் இடம் பெற்ற ஒரு பெண்ணின் பெயர்.. யார் அவர்?
விழாக்கோலம் பூண்ட புதுச்சேரி.. சீக்கிரமே வந்து விஜய்.. பேச்சைக் கேட்க திரண்ட தவெக தொண்டர்கள்!
Movie review: வசூலை வாரிக் குவிக்கும் தேரே இஷ்க் மேய்ன்.. எப்படி இருக்கு படம்?
நொறுங்கத் தின்றவனுக்கு நூறு வயசு.. பழமொழியும் உண்மை பொருளும்!
ஓம்கார ஹரியே .. ஒம் ஒம்ஹரியே கோவிந்தஹரியே .. கோவர்த்தனம் சுமந்த ஹரி நீ!
பேரின்பப் பெருவாழ்வு பெற்று உய்க... தேவாரத் தலங்களின் விளக்கமும், செல்லும் வழிகளும்!
நவதானிய லட்டு.. கர்ப்பிணிப் பெண்களுக்கு சூப்பரான உணவு.. ரத்தம் ஊறுமாம்!
சுண்டலான்னு.. கிண்டலா கேட்காதீங்க பாஸ் .. புரதங்களின் அரசன்.. குழந்தைகளின் சிறந்த snacks!
{{comments.comment}}