மத்திய பட்ஜெட் 2024 : எகிறும் எதிர்பார்ப்புகள்... எது எதற்கெல்லாம் முக்கியத்துவம் இருக்கும்?

Jan 23, 2024,05:39 PM IST

டில்லி : 2024-2025ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 01ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். 


தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் இது இடைக்கால பட்ஜெட் தான் என்றாலும், பாஜக நடப்பு ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யும் நிறைவான பட்ஜெட் என்பதால் அனைத்து தரப்பிலும் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.




2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்பதால் தேர்தல் விதிமுறைகளை மனதில் கொண்டு இந்த இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அரசு ஆட்சி அமைத்த பிறகு இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்க முடியாது. அதே போல் வரி மாற்றம், அரசு கொள்கைகள் ஆகியவற்றில் மாற்றம் செய்ய முடியாது. 


இருந்தாலும் 5.5 சதவீதம் உள்நாட்டு உற்பத்தி, 15 சதவீதம் வளர்ச்சி ஆகியவற்றை மனதில் வைத்து நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என சொல்லப்படுகிறது. உற்பத்தி துறையில் வளர்ச்சி, சாலை மற்றும் ரயில்வேறு திட்டங்கள், வேளாண் துறைகள், கீழ்தட்டு மக்களை முன்னேற்றுவதற்கு, பெண்கள் முன்னேற்றம், உற்பத்தி, பசுமை தொழில்நுட்பம் ஆகியவற்றில் அதிகம் செலுத்தி இந்த பட்ஜெட் தயார் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மருந்து மற்றும் மருத்துவ துறை சார்ந்த திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் இளைஞர் திறன் மேம்பாட்டு திட்டங்கள், ஸ்டார்ட் அப் இந்தியா துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுகாதாரத்துறையிலும் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்