இது பட்ஜெட்டே இல்லை.. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை.. ப.சிதம்பரத்திற்கு ஒரே குஷி!

Jul 23, 2024,07:08 PM IST

டெல்லி:   மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைத்தான் பட்ஜெட் என்ற பெயரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் படித்து வருகிறார். இது மகிழ்ச்சி தருகிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார்.


2024-25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முதல் முழு பட்ஜெட் தாக்கல் இதுவே. இதில் பல்வேறு வரி சலுகைகள், வரி குறைப்பு தொடர்பான அறிவிப்பு  வெளியாகி உள்ளது. இதனால் பல முக்கிய பொருட்களின் விலைகள் குறைய வாய்ப்புள்ளது. 




குறிப்பாக அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 500 முன்னணி நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைக்கான பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி காலத்தில் ஊக்கத்தொகை 5000 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கான கல்விக் கடன் வழங்கும் வரம்பு 10 லட்சமாக உயர்த்தப்படும் எனவும், இளைஞர் நலத் துறைக்கான  2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.


இந்த நிலையில் காங்கிரஸ் தேர்தல்  வாக்குறுதிகளான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த திட்டம் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார். பட்ஜெட் குறித்து அவர் கூறுகையில், மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நிர்மலா சீதாராமன் படித்து வருவது மகிழ்ச்சி. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற பல திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 30ஆவது பக்கத்தில் உள்ளது. முதல் முறை வேலையில் சேர்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.


அதேசமயம், இந்த பட்ஜெட்டை பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கான பட்ஜெட்டாக மத்திய அரசு மாற்றி விட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்