சென்னை : நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த 2025-2026ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த ஒரு அறிவிப்புக்களோ, நிதி ஒதுக்கீடோ இடம்பெறவில்லை. இது தமிழக மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி உள்ளது.
2025-2026ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். இதில் மிடில் கிளாஸ் மக்களை மகிழ்விக்கும் வகையில் பல திட்டங்கள், அறிவிப்புக்கள் இடம்பெற்றிருந்தன. அதே சமயம் மாநிலங்களுக்கு என்று பார்த்தால் பீகார் மட்டுமே அதிகம் பயனடையும் வகையிலான அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதியில் பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அதை கருத்தில் கொண்டு இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
மழையை உலக உயிர்கள் விரும்புவதை போல், நல்லாட்சியையே மக்கள் விரும்புவதாக குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், இதற்கு எடுத்துக் காட்டாக திருக்குறள் ஒன்றையும் குறிப்பிட்டார்.
அதாவது,
"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி" என்ற திருக்குறளை அவர் மேல்கோள் காட்டி பேசினார். இதனால் தமிழகத்திற்கு பலனளிக்கும் விதமாக ஏதாவது அறிவிப்புக்கள் இருக்குமா என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தமிழக மக்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில் தமிழகம் குறித்த எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.
சென்னை மெட்ரோ திட்டம், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, விவசாயிகள், சுற்றுலாத்துறை மேம்பாடு, நெடுஞ்சாலை, கல்வி, வேலைவாய்ப்பு என எந்த ஒரு அறிவிப்பும் பட்ஜெட் உரையில் இடம்பெறவில்லை. தமிழகத்தில் நிலுவையில் உள்ள பல முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும், புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என சொல்லப்பட்டு வந்தது. அதுவும் சொல்லப்படவில்லை.
எல்லாமே பீகாருக்குத்தானா.. பட்ஜெட்டை விமர்சித்த தயாநிதி மாறன்
தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் எதுவும் அறிவிக்கப்படாதது குறித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பியுமான தயாநிதி மாறன் இதுகுறித்துக் கூறுகையில், இது மிகவும் ஏமாற்றம் அளிக்கக் கூடிய பட்ஜெட்டாக உள்ளது. டெல்லியில் பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் வரவுள்ளதால் டெல்லி வாக்காளர்களைக் கவரும் வகையிலான அறிவிப்புகளே இதில் இடம் பெற்றுள்ளன. அந்த மாதிரிதான் பட்ஜெட்டை வடிவமைத்துள்ளனர்.
ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்று கூறிய நிதியமைச்சர், அடுத்து ரூ. 8 முதல் ரூ. 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கிறார். இது குழப்பமாக உள்ளது. ரூ. 12 லட்சம் வரி கிடையாது என்பது நேரடியானது அறிவிப்பாக இல்லை. டிடிஎஸ் மூலமாக நடுத்தர மக்கள் இதை கிளெய்ம் செய்தாக வேண்டும். இதில் நிறைய இருக்கிறது. எளிதானதாக இது இல்லை.
எந்த வகையில் பார்த்தாலும் நடுத்தர வர்க்க மக்களை கைவிட்ட பட்ஜெட்டாகவே இது இருக்கிறது. மீண்டும் ஒரு முறை மத்திய தர வகுப்பினரை நிதியமைச்சர் ஏமாற்றியுள்ளார். நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு எந்த வகையிலும் மாறப் போவதில்லை. எல்லாமே பீகாரை நோக்கியே போகிறது. காரணம் அங்கு தேர்தல் வரப் போகிறது. தமிழ்நாடு குறித்தோ, தென் மாநிலங்கள் குறித்தோ ஒரு வார்த்தை கூட இந்த பட்ஜெட்டில் இல்லை என்றார் தயாநிதி மாறன்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்
மக்கள் நலனுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த.. நிவேதிதா அம்மையார்!
வரலாற்று சாதனை பெற்று வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 2000த்தை நெருங்கியது
முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா
பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி
தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!
சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்
41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!
{{comments.comment}}