சென்னை: தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்து, சவரன் 76,000த்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.1,320 அதிகரித்து இருந்தது. இதனையடுத்து இன்று காலை உயர்வுடன் தொடங்கிய தங்கம் விலை, சவரனுக்கு ரூ.520 அதிகரித்து காணப்பட்டது.

இன்று பிற்பகலில் மேலும் ஒரு முறை தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலை நிலவரப்படி ஒரு கிராம் ரூ.9,470க்கும், ஒரு சவரன் ரூ.75,760க்கும் விற்பனையானது. அதே தங்கம் விலை பிற்பகல் நிலவரப்படி, ஒரு கிராம் ரூ.9,535க்கும், ஒரு சவரன் 76,280க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியை பொருத்தவரை ஒரு கிராம் ரூ.130க்கு விற்கப்பட்டு வருகிறது.
இந்தியா-அமெரிக்கா இடையேயான வரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}