திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில், பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில், பிளஸ் மாணவி பேருந்திற்காக நின்றிருந்தார். அப்போது, அங்கே வந்த 1சி என்ற அரசு பேருந்து, நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. அங்கே காத்திருந்த பிளஸ் டூ மாணவி, பிளஸ் டூ தேர்வு எழுத முடியாமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில் அந்த மாணவி பேருந்தை பின் தொடர்ந்து சற்று தூரம் ஓடியுள்ளார். மாணவி பின் தொடர்வதை பார்த்த ஓட்டுனர் சிறிது தூரத்திலலேயே பேருந்தை நிறுத்தி மாணவியை ஏற்றிக் கொண்டார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இந்த நிலையில், தேர்வு எழுவதற்காகப் பள்ளி செல்ல காத்திருந்த மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பஸ் ஓட்டுநர் முனிராஜ் தற்போது சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்த பேருந்துதை ஓட்டிய முனிராஜ் மற்றும் நடத்துனர் அசோக்குமார் ஆகியோர் பணியில் இருந்துள்ளனர். அவர்கள் பேருந்தை இயக்கியதே காலதாமதமாக இயக்கியதால், நேரம் இல்லாத காரணத்தினால் பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக கூறியுள்ளனர். இதனால், ஒட்டுனர் மற்றும் நடத்துரை மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி உடனே பேருந்தில் இருந்து இறக்கியதாகவும், மாற்று ஓட்டுநர் மற்றும் இயக்குனரை நியமித்ததாகவும் கிளை மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
{{comments.comment}}