தஞ்சாவூர்: முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும், பிறகு தொழிலை பார்க்க வேண்டும். அதல் வரும் வருமானத்தில் இருந்து ஒரு சதவீதமோ இரண்டு சதவீதமோ சேவை செய்ய வேண்டும் என்று கூறுபவர் தான் நம் தலைவர் தளபதி என்று தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தவெக கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில், தஞ்சாவூர் நான்சி மஹாலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் அழைப்பிதழ் கொடுத்து தொண்டர்களை வரவேற்றார் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.
அப்போது, அவர் பேசுகையில் கூறியதாவது:
முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும். பிறகு தொழிலை பார்க்க வேண்டும். அதில் வரும் வருமானத்திலிருந்து ஒரு சதவீதமோ இரண்டு சதவீதமோ சேவை செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் கடன் வாங்கி செலவு செய்யக்கூடாது என்று சொல்லுகிற தலைவன் தளபதி என்பதை சொல்லிக் கொள்கிறேன்.
நம் நிர்வாகி ஒருவர் எனக்கு லீவு வேணும் முதலாளி என கேட்கும்போது 26, 27 எவ்வளவு முக்கியமான நாள் நீ லீவு கேட்கிறாயே என முதலாளி கூற, முதலாளி நான் உன்கிட்ட 18 வருஷமா வேலை செஞ்சுகிட்டு இருக்கேன். எனக்கு ரெண்டு நாள் லீவு கொடுத்து விடு, அப்படின்னு கேட்டதற்கு அப்படி நீ லீவ் எடுத்தா உனக்கு போனஸ் கிடையாது. வேலையை விட்டு எடுத்து விடுவேன் எனக் கூறிய முதலாளியிடம் நீ வேலையை விட்டு எடுத்தால் என்ன? போனஸ் கொடுக்கலைனா என்ன? தலைவன் தளபதியை நான் பார்க்க வேண்டும் உன் வேலையும் வேண்டாம் எதுவும் வேண்டாம் அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு உண்மையான தொண்டன் இருக்கிறான் என்றால் அது நமது தமிழக வெற்றிக் கழகத் தொண்டன் தான் என்றார் புஸ்ஸி ஆனந்த்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}