அமைச்சர் வீட்டு சுவற்றில் மோதி.. பெரிய ஓட்டையைப் போட்ட டாக்சி!

Aug 24, 2023,02:43 PM IST
டெல்லி:  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் டெல்லி வீட்டுச் சுற்றுச் சுவர் மீது டாக்சி ஒன்று பலமாக மோதியதில், சுவரில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது.

சட்ட அமைச்சராக முன்பு இருந்தவர் கிரண் ரிஜிஜு. தற்போது புவி அறிவியல் துறை அமைச்சராக இருக்கிறார். அருணாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.  மத்திய டெல்லியின் கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் வீடு உள்ளது.  இந்த வீட்டின் சுற்றுச் சுவர் மீது நேற்று ஒரு டாக்சி வேகமாக வந்து மோதியது. பலமாக மோதியதால் சுவரில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. சுற்றுச்சுவரும் லேசான சேதத்தை சந்தித்தது.



காரை ஓட்டி வந்தவரின் பெயர் ரஹீம் கான். இவர் இதுகுறித்துக் கூறுகையில், நானும் எனது குடும்பத்தினரும் ஹரியானா  மாநிலம் நூ நகருக்கு சென்று கொண்டிருந்தோம். அமைச்சர் வீட்டின் அருகே வந்தபோது ஒரு பஸ் எனது காரை பின்னால் இடித்து விட்டது. இதனால் எனது கார் நிலை தடுமாறி வேகமாக வந்து சுவற்றில் மோதி நின்றது என்றார்.

அமைச்சர் வீட்டுக் காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் அவரை விடுவித்து விட்டனர்.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

அதிகம் பார்க்கும் செய்திகள்