இ-பாஸ் முறை: ரத்து செய்யாவிட்டால்.. கால வரையற்ற கடையடைப்பு.. கொடைக்கானல் வர்த்தக சங்கம் அறிவிப்பு!

May 04, 2024,05:15 PM IST

கொடைக்கானல்: இ- பாஸ் நடைமுறை வரும் மே 7 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ள நிலையில், இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யாவிட்டால் விடுதிகள், உணவகங்களை மூடி காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று கொடைக்கானல் ஹோட்டல் உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


ஊட்டி, கொடைக்கானலுக்கு தினசரி 20 ஆயிரம் வாகனங்கள் வருவதால் அங்கு சுற்றுச்சூழல் கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் காலத்தில் இன்னும் நிலைமை மோசமாகும் என கூறிய சென்னை உயர்நீதிமன்றம், இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இ- பாஸ் நடைமுறை மே 7 முதல் அமல்படுத்தப்படும் என நேற்று கலெக்டர்கள் அறிவித்திருந்தனர்.




இந்த நிலையில் இ- பாஸ் நடைமுறைக்கு ஊட்டி, கொடைக்கானலில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உள்ளூர் மக்களும், வர்த்தக சங்கத்தினரும் இந்த நடைமுறையால் பல சிக்கல்கள் ஏற்படும் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் கொடைக்கானல் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகக் கூட்டம் இன்று நடந்தது. அதன் பின்னர் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசியதாவது:


எங்களின் கோரிக்கைகளையும், மனுக்களையும், உடனடியாக தமிழக அரசிடமும், மாவட்ட ஆட்சியாளரிடமும்  திங்கட்கிழமை நாளை சமர்ப்பிக்க இருக்கிறோம். நிச்சயமாக விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எங்களுக்கு எந்த விடிவுகாலமும் பிறக்காவிட்டால் எல்லாமே கேள்விக்குறியாகி விடும். இங்கு வாழக்கூடிய மக்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து கொண்டு இருக்கிறார்கள். இன்னைக்கு நாங்கள் மட்டுமல்ல பாமர  மக்களும் திகைத்து கொண்டு தான் இருக்கின்றனர். 


அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டதால் அனைத்து சங்கங்களும் எங்களை அணுகி இருக்கிறார்கள். எங்களுக்கு நீங்கள் எல்லாம் சேர்ந்து மாவட்ட ஆட்சியாளரிடமும் அரசாங்கத்திடமும் மேல்முறையீடு மனுவை முறையிட்டு இபாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்கள்.


நாங்கள் அனைவரும் சேர்ந்து சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு அறைகளே கொடுக்க மாட்டோம். உணவு விடுதியில் யாருக்கும் உணவு வழங்க மாட்டோம். மாவட்ட ஆட்சியாளரிடம் கலந்து எங்களுக்கு சுமூகமான தீர்வு வழங்காவிட்டால் காலவரையற்ற உணவு விடுதிகள், ஹோட்டல்கள் மூடப்படும். வர்த்தக சங்கங்கள் அனைவரும் இணைந்து நாங்கள் இ-பாஸ் நடைமுறை வந்தால் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட போகிறது. அதற்கு, மொத்தமாக அடைத்து விட்டுப் போகிறோம். மொத்தமாக பாதிப்பு ஏற்படட்டும். 


தமிழக அரசு உடனே மேல் முறையீடு மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கொடைக்கானல் மக்களுக்கு உரியநிவாரணத்தை ஏற்படுத்தித் தர வேண்டும். இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசிடம் கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்