மாட்டுத் தீவன ஊழல் வழக்கு : லாலு பிரசாத்திற்கு சிபிஐ மனுத்தாக்கல்

Aug 18, 2023,12:13 PM IST
டில்லி : மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவிற்கு வழங்கப்பட்ட ஜாமினை எதிர்த்து சிபிஐ தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பீகார் முதல்வராக இருந்த போது ரூ.950 கோடி அளவிற்கு மாட்டு தீவனம் வாங்கிய விவகாரத்தில் ஊழல் செய்து அரசு பணத்தில் முறைகேடு செய்ததாக லாலு பிரசாத் மீது சிபிஐ பல்வேறு வழக்கு தொடர்ந்து. மாட்டு தீவன ஊழல் தொடர்பான சுமார் 4 வழங்குகளில் லாலு பிரசாத்திற்கு ஜாமின் வழங்கி ஜார்கண்ட் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. 



இந்த வழக்குகள் அனைத்திலும் லாலு பிரசாத் குற்றவாளி என தண்டனை பெற்றுள்ளார். இவர் மேல்முறையீடு செய்த மனுக்கள் பல்வேறு கோர்ட்களில் நிலுவையில் உள்ளன. இந்த சமயத்தில் அவருக்கு ஜாமின் வழங்கியது செல்லாது என எதிர்த்து சுப்ரம் கோர்ட்டில் சிபிஐ தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை ஆகஸட் 25 ம் தேதி நடைபெறும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. 

ரயில்வே துறை அமைச்சராக இருந்த போது லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, லாலு பிரசாத்தின் மகனும் பீகார் துணை முதல்வருமான தேவஸ்வி யாதவ் ஆகியோர் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 2004 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரை ஏராளமானோரிடம் பல்வேறு நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி முறைகேடு செய்ததாக கடந்த மாதம் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. 

எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியில் லாலு பிரசாத் யாதவ் தான் முக்கியமாக இருந்து செயல்பட்டு வருகிறார். மத்திய பாஜக அரசை வீழ்த்த வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வரும் லாலு பிரசாத்திற்கு எதிராக சிபிஐ தனது பிடியை இறுக்கி வருவது தேசிய அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை ஆயுதமாக பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் லாலு பிரசாத்திற்கு எதிரான சிபிஐ.,யின் இந்த புதிய மனு எதிர்க்கட்சிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்