மணிப்பூர் பெண்கள் நிர்வாண  சம்பவம்.. விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

Jul 29, 2023,04:33 PM IST
டெல்லி: மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது.

மணிப்பூரில் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக  வன்முறை தலைவிரித்தாடி வருகிறது. 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல வீடுகள் எரிக்கப்பட்டு விட்டன. பெண்கள் மிகப் பெரிய அளவில் பாலியல் ரீதியாக கொடூரங்களுக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.



இந்த நிலையில்தான் சமீபத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி மிகக் குரூரமாக ஒரு ஆண் கும்பல் நடத்திய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. பிரதமர் நரேந்திர மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் என பலரும் இந்த கொடூரமான சம்பவத்தை கடுமையாக கண்டித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிலரை மணிப்பூர் போலீஸார் கைது செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  தற்போது சிபிஐ விசாரணை தொடங்கி விட்டது. கடந்த மே மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளதால் இதுகுறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று நம்பப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்