மனைவியை சரமாரியாக.. அடித்தே கொன்ற அரசியல்வாதி...  பதற வைக்கும் 8 மணி நேர வீடியோ!

May 04, 2024,05:14 PM IST

அஸ்தானா: கஜகஸ்தான் நாட்டு முன்னாள் அமைச்சர் குனடிக் பிஷிம்பயேவ் என்பவர், தனது 31 வயதான மனைவி சல்தானத் நுகனோவா என்பவரை மிகக் கொடூரமாக அடித்துக் கொன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அந்த நாட்டு மக்களை அதிர வைத்துள்ளது. இதுதொடர்பான 8 மணி நேர வீடியோவை கோர்ட்டில் போட்டுக் காட்டியுள்ளனர் காவல்துறையினர்.


கஜகஸ்தான் நாட்டு பொருளாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் குனடிக் பிஷிம்பயேவ். இவரும் இவரது மனைவியும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், குனடிக்கின் உறவினருக்குச் சொந்தமான ஹோட்டலில் தங்கியிருந்தனர். அடுத்த நாள் சல்தானத்தின் இறந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் அடித்துக் கொல்லப்பட்டிருந்தார். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி கடைசியில் குனடிக்கை கைது செய்தனர்.




இந்தக் கொலை வழக்கு தொடர்பாக தற்போது போலீஸார் 8 மணி நேரம் ஓடக் கூடிய சிசிடிவி வீடியோ பதிவை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். அதில் குனடிக் தனது மனைவியை மிகக் கொடூரமாக கொலை செய்த காட்சிகள் அடங்கியுள்ளனர். பார்ப்பவர்களைப் பதற வைப்பதாக உள்ளது அந்தக் காட்சிகள். தனது மனைவியை ஹோட்டல் அறையில் வைத்து சரமாரியாக அடித்துள்ளார் குனடிக். வெறித்தனமாக அவர் அடித்ததில் பல மணி நேரம் சுய நினைவிழந்த நிலையில் இருந்துள்ளார். பின்னர் அறைக்குள் கொண்டு போய் வைத்தும் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில்தான் சல்தானத் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


கைகளால் தாக்கியும் கால்களால் உதைத்தும் அடித்துள்ளார். பிறகு மனைவியை தலைமுடியைப் பிடித்து தரதரவென இழுத்து ரூமுக்குள் போவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அவர் சென்ற அறைக்குள் வீடியோ கேமரா இல்லாததால் அதன் பிறகு நடந்த காட்சிகள் பதிவாகவில்லை.


ஒரு கட்டத்தில் கணவரின் அடி உதையிலிருந்து தப்பிக்க டாய்லெட்டுக்குள் ஓடி ஒளிகிறார் சல்தானத். ஆனால் டாய்லெட் கதவை உடைத்து உள்ளே புகுந்து விடாமல் அடித்துள்ளார் இந்த கொடூர நபர்.  டாய்லெட்டுக்குள் ஒளிந்த மனைவியை கழுத்தை நெரித்துக் கீழே தள்ளுகிறார். அதன் பின்னர்தான் அவர் சுய நினைவை இழந்துள்ளார். 




அவரது உடலில் நடந்த பிரேதப் பரிசோதனையின்போது அவருக்கு மூளையில் கடுமையான காயம் ஏற்பட்டு மரணம் சம்பவித்திருப்பது தெரிய வந்தது. மேலும் அவரது மூக்கு எலும்புகள் நொறுங்கிப் போயுள்ளன. முகம், தலை, கைகள், கால்களில் கடுமையான காயங்களும் ஏற்பட்டிருந்தன.


கைது செய்யப்பட்டுள்ள குனடிக்குக்கு 20 வருடம் சிறைத் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இவர் மீதான விசாரணை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பொதுமக்கள் இந்த கொடூர நபரின் செயல் குறித்து அறிந்து கடும் கொதிப்படைந்துள்ளனர்.


இவர் ஏற்கனவே 2017ம் ஆண்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு பத்து வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர். ஆனால் 3 ஆண்டு மட்டுமே சிறையில் இருந்து விட்டு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலையாகி விட்டார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்