Pan D, P 500 மாத்திரைகள் தரக்குறைவானவை.. மத்திய மருந்து கட்டுப்பாட்டுக் கழகம் பரபரப்பு அறிக்கை!

Sep 26, 2024,06:42 PM IST

சென்னை: பான் டி, பாராசிட்டமால் 500 உள்ளிட்ட 59 வகையான மாத்திரைகள் தரக்குறைவானவை என்று  தெரிய வந்துள்ளதாக மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த மாத்திரைகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் என்பதால் பரபரப்பு கூடியுள்ளது. இதுதவிர நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நோய்களுக்காக  சாப்பிடும் மாத்திரைகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. 


இருப்பினும் இந்த 59 வகையான மாத்திரைகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், சோதனைக்குட்படுத்தப்பட்ட மாத்திரைகள் போலியானவை என்றும் தங்களது தயாரிப்புகள் தரம் வாய்ந்தவை என்றும் மறுத்துள்ளன. 




வெளிநாடுகளில் டாக்டர்கள் கொடுக்கும் மருந்தைத்தான் நாம் பயன்படுத்த முடியும். மெடிக்கல் ஷாப்களில் போய் நம் இஷ்டத்திற்கு எந்த மாத்திரை, மருந்தையும் வாங்க முடியாது. ஆனால் நமது நாட்டில் அப்படி இல்லை. இங்கு டாக்டரிடம் போய் மருந்து வாங்கி சாப்பிடுபவர்களை விட கவுன்டர் சேல்ஸ் எனப்படும் மெடிக்கல் ஷாப்களில் போய் அவர்களே வாங்கி சாப்பிடுவோர்தான் அதிகம். வயிறு சரியில்லாவிட்டால், ஒரு பான் டி யை வாங்கி வாயில் போட்டு, நாலு ஏப்பம் வந்ததும், ஓகே இப்ப வயிறு சரியாகி விட்டது என்று நினைத்துக் கொண்டு பிறகு சாப்பிடுவோர் இங்கு ஆயிரக்கணக்கில் உள்ளனர்.


இந்த மாத்திரைகளையெல்லாம் பெரும்பாலானவர்கள் இஷ்டத்திற்கு சாப்பிடுவதும் வழக்கமாக உள்ளது. அப்படி மக்களால்  அதிகம் வாங்கப்படும் மாத்திரைகளாக பாராசிட்டமால், பான் டி உள்ளிட்டவை உள்ளன. அப்படிப்பட்ட மாத்திரைகள் தரம் குறைந்தவையாக உள்ளதாக மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுக் கழகம் அறிவித்திருப்பது மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த 59 வகையான மாத்திரைகளில் பான் டி, பாராசிட்டமால் தவிர ஆன்டிபயாட்டிக்குகள், பிபி மாத்திரைகள், சர்க்கரை நோய் மாத்திரைகள், கால்சியம் மாத்திரைகள் ஆகியவையும் அடக்கம். மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் இந்த அறிக்கையால் தற்போது விற்பனையில் உள்ள மாத்திரைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விற்பனையிலிருந்து வாபஸ் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!

news

தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது

news

கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்

news

செட்டிநாட்டு அடுப்படி.. காரசாரமான நான் வெஜ் சுவையில்.. அசத்தலான பலாக்காய் பிரட்டல்!

news

சோஷியல் மீடியா சமையல்ங்கிறது.. பார்க்குறப்போ ஆஹா... பண்ணி முடிச்ச அப்புறம் ஆத்தா!

news

மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை

news

ஆதிக்கம் செலுத்தும் ஏஐ.. மனிதர்களுக்கு இடையிலான உரையாடல்கள் குறைய ஆரம்பித்து விட்டதா?

news

தொகுதி மறுவரையறை.. அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு!

news

Double Meaning talks: மனிதர்கள் எப்போது டபுள் மீனிங் + கெட்ட வார்த்தையில் பேச ஆரம்பிக்கிறார்கள்?

அதிகம் பார்க்கும் செய்திகள்