டெல்லி: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அம்பலகாரர்கள் (பாரம்பரிய சமூக தலைவர்கள்) விடுத்த கோரிக்கையை ஏற்று அரிட்டாபட்டி டங்ஸ்டன் ஆலை ஏலம் ரத்து செய்யப்பட்டதாக மத்திய சுரங்கங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரிட்டாபட்டி டங்ஸ்டன் ஆலை ஏலத்தை மத்திய அரசு இன்று முழுமையாக ரத்து செய்தது. இதுதொடர்பாக மத்திய சுரங்கங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி அவர்களை, தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அம்பலகாரர்கள் (பாரம்பரிய சமூக தலைவர்கள்) புதுதில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம தொகுதியில் அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தளமும் பல கலாச்சார பாரம்பரிய தளங்களும் உள்ளன என்று அம்பலகாரர்கள் மத்திய அமைச்சரிடம் தெரிவித்தனர்.

சுரங்க அமைச்சகம் 2024 டிசம்பர் 24 தேதியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், டங்ஸ்டன் தொகுதி ஏல நடைமுறைக்குப் பிறகு, அப்பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தளம் உள்ளது என்ற அடிப்படையில் ஏலத்திற்கு எதிராக கருத்துகள் பெறப்பட்டுள்ளன என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 22.01.2025 அன்று நடைபெற்ற சந்திப்பின் போது, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதி ஏலத்தை ரத்து செய்யுமாறு அப்பகுதி அம்பலகாரர்கள் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்தக் குழுவினரின் கோரிக்கைகளை பொறுமையாகக் கேட்டறிந்த மத்திய அமைச்சர், பல்லுயிர் பாரம்பரிய பாதுகாப்புக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார்.
விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, இப்பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம தொகுதியின் ஏலத்தை ரத்து செய்ய சுரங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு
ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!
மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
{{comments.comment}}