டெல்லி: சமோசா, ஜிலேபிக்கு எச்சரிக்கை வாசகங்கள் கட்டாயம் என்ற தகவல் ஆதாரமற்றது என்று மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
சமோசா இல்லாத ஒரு வாழ்க்கையை இந்தியர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பிரபலமான ஒரு தீனிதான் சமோசா. அதேபோலத்தான் ஜிலேபியும். இந்த இனிப்பு வகைக்கு அடிமை ஆகாத வாய்களே இருக்க முடியாது. இந்த நிலையில் இந்த இரண்டு உணவுக்கும் மத்திய அரசு தடை விதிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. ஆனால் இதை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
இதுதொடர்பாக பிஐபி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சமோசா, ஜிலேபி மற்றும் லட்டு போன்ற உணவுப் பொருட்களுக்கு எச்சரிக்கை வாசகங்கள் கட்டாயம் என மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக சில ஊடக அறிக்கைகள் வெளியிட்டன. இந்த ஊடகச் செய்திகள் தவறானவை, உண்மைக்கு புறம்பானவை மற்றும் அடிப்படையற்றவை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம், பணியிடங்களில் ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளை மேற்கொள்ளும் வகையில் ஒரு தனி ஆலோசனையை வெளியிட்டிருந்தது. இந்த ஆலோசனை, பல்வேறு பணியிடங்களான வரவேற்பு அறைகள் (lobbies), சிற்றுண்டிச்சாலைகள் (canteens), காஃபி கடைகள் (cafeterias), சந்திப்பு அறைகள் (meeting rooms) போன்றவற்றில், பல்வேறு உணவுப் பொருட்களில் மறைந்துள்ள கொழுப்புகள் மற்றும் அதிகப்படியான சர்க்கரை நுகர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பலகைகளை காட்சிப்படுத்துமாறு அறிவுறுத்துகிறது. இந்தப் பலகைகள், நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சனைக்கு எதிராகப் போராடுவதற்கான தினசரி நினைவூட்டல்களாக செயல்படும் நோக்கத்தைக் கொண்டுள்ளன.
சுகாதார அமைச்சகத்தின் இந்த ஆலோசனை, விற்பனையாளர்களால் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு எச்சரிக்கை வாசகங்கள் ஒட்டுமாறு நேரடியாக அறிவுறுத்தவில்லை. மேலும், இது இந்திய நொறுக்குத் தீனிகளை மட்டும் குறிவைக்கவில்லை. இந்தியாவின் வளமான தெரு உணவு கலாச்சாரத்தை இது இலக்கு வைக்கவில்லை.
இந்த பொதுவான ஆலோசனை, அனைத்து உணவுப் பொருட்களிலும் மறைந்துள்ள கொழுப்புகள் மற்றும் அதிகப்படியான சர்க்கரை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு நடத்தை ரீதியான தூண்டுதல் ஆகும். இது எந்த ஒரு குறிப்பிட்ட உணவுப் பொருளையும் நோக்கமாகக் கொண்டதல்ல. இந்த ஆலோசனையில், பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள உணவுகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை மேம்படுத்துதல், படிக்கட்டுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், குறுகிய உடற்பயிற்சி இடைவேளைகளை ஏற்பாடு செய்தல் மற்றும் நடைபயிற்சி பாதைகளை எளிதாக்குதல் போன்ற உடல் செயல்பாடுகளைத் தேர்ந்தெடுப்பதற்கான பரிந்துரைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த முயற்சி, தொற்றுநோயல்லாத நோய்களைத் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவதற்கான தேசிய திட்டம் NP-NCD கீழ் அமைச்சகத்தின் முதன்மைத் திட்டங்களில் ஒன்றாகும். எண்ணெய் மற்றும் சர்க்கரையின் அதிகப்படியான நுகர்வு, உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற வாழ்க்கை முறை தொடர்பான நோய்களின் அதிகரித்து வரும் விகிதங்களுக்கு முக்கிய காரணிகளாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு.. இன்று முதல் இடி மின்னலுடன் மழையை அனுபவிக்கத் தயாராகுங்கள்.. வெதர்மேன் அப்டேட்!
நிமிஷா பிரியா செய்தது மிகப் பெரிய குற்றம்.. மன்னிப்பே கிடையாது.. ஏமன் நாட்டவரின் சகோதரர்
நான் எடுப்பது தான் முடிவு... கூட்டணி ஆட்சி இல்லை: எடப்பாடி பழனிசாமி
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் திமுகவின் தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு: டாக்டர் அன்புமணி
பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு... ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு
யூடியூபர்களுக்கு வந்த புது சிக்கல்... இனி ஈஸியா காசு பாக்க முடியாது
விஜய் போட்ட சூப்பர் ஸ்கெட்ச்.. மதுரை மாநாட்டு தேதி ஸ்பெஷல்.. விஜயகாந்த் பிறந்த நாள் + கல்யாண நாள்!
தங்கம் விலை நேற்று மட்டும் இல்லங்க... இன்றும் குறைவு தான்...மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
விசிகவின் வாக்குகள் கொத்துக் கொத்தாக திமுக கூட்டணிக்கு விழும்.. திருமாவளவன் உத்தரவாதம்
{{comments.comment}}