"லஞ்சம் வாங்கிய சென்சார் போர்டு".. விஷால் புகார்.. விசாரணைக்கு உத்தரவு!

Sep 29, 2023,04:54 PM IST

சென்னை: அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியில்  சென்சார் போர்டு மீதே புகார் அளிக்கும் நிலை வந்துள்ளது. லஞ்சம் வாங்கியதாக நடிகர் விஷால் ஆதாரங்களுடன்  மும்பை சென்சார் போர்டு மீது புகார் அளித்துள்ளார். அதனை உடனடியாக விசாரிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த மார்க் ஆண்டனி என்ற  திரைப்படம் தமிழில் செப்டம்பர் 15ம் தேதி வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருந்ததினால் ரூபாய் 60 கோடிக்கு மேல் வசூலித்தது. 




இப்படம் இந்தியில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த படத்தை இந்தியில் வெளியிட மும்பை சென்சார் போர்டுக்கு 2 தவனைகளில் ரூபாய் 6.5 லட்சம்  தன்னிடம் இருந்து லஞ்சமாக அதிகாரிகள் பெற்றதாக இணையதளத்தில் வீடியோ ஒன்றை விஷால் வெளியிட்டு, மத்திய அரசிடம் விசாரணைக்கு கோரியிருந்தார்.


இந்த வீடியோ நெட்டிசன்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வெளியிட்ட வீடியோவில், மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிட மும்பையில் உள்ள சென்சார் போர்டை அணுகியபோது, அங்குள்ள அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் கேட்டதாகவும், தானும் வேறு  வழியின்றி  அதனை 2 தவணைகளிலில் ரூ.3 லட்சமும், சான்றிதழுக்கு ரூ.3.5 லட்சமும் வங்கி கணக்கில் இருந்து அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.


நிஜ வாழ்க்கையிலும் இது போன்று நடப்பதை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும், தான் லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கான ஆதாரம் குறித்த தகவல்களை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் விசாரணைக்கும் கோரிக்கை வைத்திருந்தார்.


இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விரைவில் மும்பை சென்று சென்சார் போர்டு அதிகாரிகளிடம் அதிகாரி ஒருவர் விசாரணை நடத்தவுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்