மோடி, அமித் ஷாதான் முடிவெடுப்பார்கள்.. அண்ணாமலைக்கு பவர் கிடையாது.. எடப்பாடி பழனிச்சாமி

Apr 03, 2023,11:26 AM IST
சேலம்:  கூட்டணி குறித்து மத்தியில் உள்ள தலைவர்கள்தான் முடிவெடுப்பார்கள். மாநிலத்தில் உள்ளவர்களுக்கு அந்த அதிகாரம் கிடையாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

அதிமுக - பாஜக  கூட்டணி தொடர்பாக பெரும் குழப்ப நிலை நிலவுகிறது. இதற்குக் காரணம், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தனித்துப் போட்டியிட விரும்புவதாக பேசியதால். இந்தப் பேச்சை பாஜகவினரே கூட ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவினரும் அண்ணாமலை பேச்சுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.



இந்த நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற அண்ணாமலை, அங்கு அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார். அதுகுறித்து நேற்றுசெய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவுடன் கூட்டணி இல்லை  என்று அமித் ஷா இறுதியாக அறிவிக்கவில்லை. கூட்டணி குறித்து தலைவர்கள் முடிவெடுப்பார்கள். அவர்கள் சொல்வதை நாங்கள் கேட்டுக் கொள்வோம் என்று மீண்டும் அதிமுகவை சீண்டும் வகையில் பேசியிருந்தார்.

இதுகுறித்து இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில்,  தேசியத் தலைவர்களான நரேந்திர மோடி, அமித் ஷா, நட்டா ஆகியோர்தான் கூட்டணி குறித்து பேசி வருகிறார்கள். சில ஆலோசனைகளையும் கொடுத்துள்ளனர். மத்தியில் உள்ள தலைவர்கள்தான் கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என்று கூறியுள்ளனர்.

நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன். கூட்டணி குறித்து மத்தியில் உள்ள தலைவர்கள்தான் முடிவெடுப்பார்கள். மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல என்று அழுத்தம் திருத்தமாக பதிலளித்தார் எடப்பாடி பழனிச்சாமி.

சமீபத்திய செய்திகள்

news

Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

அதிகம் பார்க்கும் செய்திகள்