வங்கதேச விவகாரம்.. மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்.. எதிர்க்கட்சிகள் உறுதி!

Aug 06, 2024,06:27 PM IST

டெல்லி:   வங்கதேச நிலவரம் குறித்து அனைத்துக் கட்சிகளுடன் இன்று மத்திய அரசு ஆலோசித்தது. நிகழ்வுகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் விளக்கினார். அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக அப்போது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர்.


வங்கதேசத்தில் பெரும் மக்கள் புரட்சி வெடித்து அது கலவரம் மற்றும் வன்முறையாக மாறியது. இதனால் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி விட்டார். தற்போது இந்தியா வந்துள்ள அவர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.




இதையடுத்து வங்கதேசத்தில் ராணுவ ஆதரவுடன் இடைக்கால ஆட்சி அமையவுள்ளது. மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவும் விடுதலை செய்யப்படவுள்ளார்.  அடுத்தடுத்து நடந்து வரும் நிகழ்வுகளை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது. இந்தப் போராட்டத்தின்போது இந்திய எதிர்ப்பு மனோ நிலையையும் போராட்டக்காரர்கள் வெளிப்படுத்தியதையும் மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது.


இந்த நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன, எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் இதுகுறித்து அனைத்துக் கட்சிகளுக்கும் விளக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது. அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்தது. 


அதன்படி இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அதில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, கேசி வேணுகோபால், திமுக சார்பில் டி.ஆர்.பாலு உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ராகுல் காந்தி ஏராளமான கேள்விகளை எழுப்பினார். அவற்றுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்தார். இறுதியில் அனைத்துக் கட்சிகளும் அரசுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்தனர்.




இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வங்கதேச நிகழ்வுகள் குறித்து விளக்கிக் கூறினேன். எதிர்க்கட்சிகள் அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக  ஒருமித்த குரலில் தெரிவித்தனர். அவர்களது புரிந்து கொள்ளுதலுக்கும், ஆதரவுக்கும் நன்றிகள் என்று கூறியுள்ளார் ஜெய்சங்கர்.


இன்று பிற்பகல் வங்கதேச நிலவரம் குறித்து நாடாளுமன்றத்திலும் எம்பிக்களிடையே உரையாற்றி விளக்கம் தரவுள்ளார் அமைச்சர் ஜெய்சங்கர்.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்