டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ள துப்பாக்கிச் சுடும் வீராங்கனை மானு பாக்கருக்குப் பின்னணியில், அவரது நீண்ட கால போராட்டம் மட்டுமல்லாமல் மிகப் பெரிய அளவிலான பயிற்சியும் அடங்கியுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் மானு பாக்கர். இது இந்தியாவுக்கு முதல் பதக்கமாகும். மானு பாக்கர் கடந்த ஒலிம்பிக் போட்டியின்போது துப்பாக்கி சரியாக சுட முடியாமல் போனதால் போட்டியிலிருந்து வெளியேறினார் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் மிகப் பெரிய அளவில் பயிற்சி கொடுத்து நடப்பு ஒலிம்பிக் போட்டியில் களம் இறக்கப்பட்டார் மானு பாக்கர். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. மானு பாக்கருக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகள் குறித்து மத்திய வெளியாட்டுத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவ்யா கூறுகையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளார் மானு. இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார். கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டவர் மானு.
நாட்டின் விளையாட்டு அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்டதுதான் கேலோ இந்தியா. பல்வேறு சிறப்புத் திட்டங்கள் பல்வேறு வகையான விளையாட்டுகளுக்காக உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. நல்ல பயிற்சிகள் வரவழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. சர்வதேச தரத்திலான பயிற்சி தரப்படுகிறது.
மானுவுக்கும் கூட ரூ. 2 கோடி வரை பயிற்சிக்காக செலவிடப்பட்டது. ஜெர்மனிக்கும், சுவிட்சர்லாந்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அவருக்குப் பயிற்சி தரப்பட்டது. அவருக்குப் பிடித்த பயிற்சியாளர் அமர்த்தப்பட்டார். அனைத்து வீரர் வீராங்கனைகளுக்கும் இதுபோன்ற தரமான பயிற்சி தரப்பட்டது. மற்ற வீரர், வீராங்கனைகளும் கூட இந்த ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவார்கள் என்றார் அமைச்சர் மாண்டவ்யா.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}