அதிர வைத்த சர்வதேச கால்கள்.. வாட்ஸ் ஆப்பிடம் விளக்கம் கேட்கும் மத்திய  அரசு!

May 12, 2023,09:51 AM IST
டெல்லி:  வாட்ஸ் ஆப்களில் வந்து கொண்டிருக்கும் தேவையில்லாத சர்வதேச கால்கள் குறித்து மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. இதுதொடர்பாக வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் பலருக்கும் சர்வதேச நம்பர்களிலிலிருந்து தேவையில்லாத அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த அழைப்புகளால் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோர் பெரும் குழப்பமும் பீதியும் அடைந்துள்ளனர். இந்த சர்வதேச கால்களை யார் செய்வது, எதற்காக செய்கிறார்கள் என்று புரியவில்லை. 



பல்வேறு நம்பர்களிலிருந்து அடுத்தடுத்து கால்கள்  வருகின்றன.  ஒவ்வொரு அழைப்பும் வந்து வந்து கட் ஆகிறது. இவற்றை அட்டென்ட் செய்தால் அது நமது போனை ஸ்பாம் செய்து அதில் உள்ள டேட்டாக்களைத் திருடும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வங்கிக் கணக்கு உள்ளிட்டவை இருந்தால் நமது பணம் அபகரிக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன. இதனால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தற்போது மத்திய அரசு  ஆக்ஷனில் குதித்துள்ளது. மர்மமான சர்வதேச கால்கள் குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், டிஜிட்டல் ஊடகங்கள் அதன் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்கும் கடமையிலிருந்து தவற முடியாது. வாட்ஸ்ஆப் சர்வதேச கால்கள் விவகாரம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். விரைவில் இதுதொடர்பாக வாட்ஸ்ஆப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார்.

பெரும்பாலான சர்வதேச கால்கள் இந்தோனேசியா (கோட் நம்பர் 62), வியட்நாம் (84), எத்தியோப்பியா (251), கென்யா (254), மலேசியா (60), அங்கோலா (244), அல்ஜீரியா (213) ஆகிய நாடுகளிலிருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

எழுதுகிறேன் என் மனதை (கடிதக் கவிதை)

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

Kodumudi Brahma temple: கொடுமுடி பிரம்மா சன்னதியும், வன்னி மரத்தின் சிறப்புகளும்!

news

நேபாளத்தில் ஓயாத அமளி.. அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா.. அரசு கவிழ்கிறதா?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

தொடர் புதிய உச்சத்தில் தங்கம் விலை... கிடுகிடு வென உயர்ந்து சவரன் ரூ.81,000த்தை கடந்தது!

அதிகம் பார்க்கும் செய்திகள்