பாஜகவின் புதிய செக்.. முதல்வர், அமைச்சர்கள் கைதானால் 30 நாளில் பதவி காலி.. புது மசோதா!

Aug 20, 2025,12:02 PM IST

டெல்லி: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீது தீவிர கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டாலோ அல்லது காவலில் வைக்கப்பட்டாலோ, அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவதை உறுதிசெய்யும் மசோதா புதன்கிழமை அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 


பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்கள் என அனைவரையும் இது உள்ளடக்கும். இருப்பினும் பிரதமர், மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்படுவது அரிதிலும் அரிது என்பதால் இது முழுக்க முழுக்க மாநில கட்சிகளைக் குறி வைத்து கொண்டு வரப்பட்ட சட்டமாக எதிர்க்கட்சிகள் பார்க்கின்றன. அதிலும் அமலாக்கத்துறை மூலம் பாஜக அரசியல் செய்வதாக பொதுவான குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் இந்த சட்டமானது, எதிர்க்கட்சிகளை முழுமையாக முடக்கிப் போடும் சட்டமாக இருக்கும் என்பதும் எதிர்க்கட்சிகளின் கருத்தாக உள்ளது.




இந்த மசோதாவும், மேலும் இரண்டு மசோதாக்களான, யூனியன் பிரதேசங்கள் (திருத்தம்) மசோதா 2025, அரசியலமைப்பு (நூற்று முப்பதாவது திருத்தம்) மசோதா 2025 மற்றும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா 2025 ஆகிய மசோதாக்களையும் இன்று தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்வார். இந்த மசோதாக்கள் அனைத்தும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டுவரப்படுகின்றன.


தற்போது, அரசியலமைப்பு சட்டப்படி, தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளை மட்டுமே பதவியில் இருந்து நீக்கப்பட முடியும்.  புதிய மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ள பிரிவு (5A)-ன் படி, ஒரு அமைச்சர் தொடர்ந்து 30 நாட்களுக்கு கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், அவர் மீது ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றம் சாட்டப்பட்டால், முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் லெப்டினன்ட் கவர்னர் அவரைப் பதவி நீக்கம் செய்வார். முதலமைச்சர் 30 நாட்களுக்குள் ஆலோசனை வழங்காவிட்டால், அந்த அமைச்சர் தானாகவே பதவியை இழப்பார்.


முதலமைச்சரைப் பொறுத்தவரை, அவர் 30 நாட்களுக்கு கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், அவர் தனது ராஜினாமா கடிதத்தை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும். அவர் ராஜினாமா செய்யாவிட்டால், அவர் தானாகவே முதலமைச்சர் பதவியை இழப்பார். இருப்பினும், இந்த மசோதாவின்படி, பதவி நீக்கம் செய்யப்பட்ட முதலமைச்சர் அல்லது அமைச்சர், பின்னர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டால், மீண்டும் முதலமைச்சராகவோ அல்லது அமைச்சராகவோ நியமிக்கப்படலாம்.


கடந்த காலத்தில் டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகும் கூட முதல்வராக நீடித்தார். அதேபோல தமிழ்நாட்டில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலும் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். செந்தில் பாலாஜியை ஆளுநர் ஆர். என். ரவி டிஸ்மிஸ் கூட செய்தார். ஆனால் சட்ட விரோதமான நடவடிக்கை என்பதால் அதை பின்னர் திரும்பப் பெற்றார். இந்த நிலையில்தான் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது.


இந்த சட்டத்தின் கைதாகும், முதல்வர்கள், அமைச்சர்களின் பதவிகளுக்கு ஆபத்து வந்துள்ளது.  குறிப்பாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டால் 30 நாளில் பதவியை இழக்கும் அபாயமும் அதிகரித்துள்ளது.


இந்த மசோதாக்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடருக்கான திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பீகாரில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) மீதான கவனத்தை திசை திருப்பும் முயற்சி இது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதாக்கள், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால், அரசியல் களத்தில் பல மாற்றங்கள் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த மசோதாக்கள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. இந்த மசோதாக்கள் அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்தப்படலாம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.


இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

குத்தகைக்கு ஓட்டுனர், நடத்துனர் நியமனம்...சமூகநீதியை குழிதோண்டி புதைக்கும் செயல்: டாக்டர் அன்புமணி

news

திரியோதசியில் வரும்.. ஆவணி மாத பிரதோஷம்.. சிவனையும், நந்தியையும் வழிபட உகந்த நாள்!

news

மதிமுக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யா தற்காலிக நீக்கம்: வைகோ

news

46 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கமல்-ரஜினி?.. மாஸ் காட்டப் போகும் லோகேஷ் கனகராஜ்!

news

தொடர்ந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வரும் தங்கம் விலை... இன்று எவ்வளவு குறைவு தெரியுமா

news

டில்லியில் 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெளிகுண்டு மிரட்டல்

news

பாஜகவின் புதிய செக்.. முதல்வர், அமைச்சர்கள் கைதானால் 30 நாளில் பதவி காலி.. புது மசோதா!

news

டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது திடீர் தாக்குதல்.. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரால் பரபரப்பு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 20, 2025... இன்று அதிர்ஷ்டம் கதவை தட்டும்

அதிகம் பார்க்கும் செய்திகள்