கருப்பை வாய் புற்றுநோய்: 14 வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசி திட்டம் - பட்ஜெட்டில் அறிவிப்பு

Mar 14, 2025,05:25 PM IST

சென்னை: கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க 14 வயது சிறுமிகள் முதல் அனைவருக்கும் தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூபாய் 36 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


2025 - 2026 ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக சட்டசபையில் இன்று (மார்ச் 14) தாக்கல் செய்து வருகிறார்.அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் திமுக தலைமையிலான் அரசு 5ஆவது  மற்றும் கடைசி நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்து வருகிறது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இரண்டாவது ஆண்டாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் தமிழக மகளீர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.




மகளிர் நலன் சார்ந்த அறிவிப்புகள்:


கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு  ரூ.13,807 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள் அமைக்கப்படும்.


கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க 14 வயது சிறுமிகள் அனைவருக்கும் தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூபாய் 36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


வரும் நிதியாண்டில் பத்தாயிரம் புதிய மகளிர் சுய உதவி குழுக்கள் அமைக்கப்படும். இந்த மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூபாய் 37,000 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் வழங்கப்படும்.


விடியல் பயணத்திட்டத்தின் மூலம் நாள்தோறும் 50 லட்சம் மகளிர் பயணம் செய்து பயனடையும் வகையில், ரூபாய் 3600 கோடி மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விடியல் பயணம் காரணமாக பேருந்து பயணம் செய்யும் பெண்களின் சதவீதம் 60 வரை உயர்ந்துள்ளது. மாதம் 888 ரூபாயை பெண்கள் சேமிப்பதாக திட்டக்குழு அறிக்கை கூறுகிறது

ரூ. 10 லட்சம் வரையிலான வீடு, வீட்டு மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையாச் சொத்துக்களை பதிவு செய்தால், பதிவுக் கட்டணத்திலிருந்து 1 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். 1.4.2025 முதல் இது அமலுக்கு வரும்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதியவர்கள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்பு விரைவில் வழங்கப்படும்.


கோவை, மதுரை, திருச்சி,சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, திண்டுக்கல், வேலூர், தஞ்சை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 25 அன்புச்சோலை மையம் அமைக்கப்படும்.


மூன்றாம் பாலினத்தோர் ஊர்க்காவல் படையில் இணைக்கப்படுவர் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகிர் உசேன் கொலை வழக்கு.. யாரும் தப்ப முடியாது.. முதல்வர் மு க ஸ்டாலின்

news

வெயிலுக்கு ஒரு குட்டி பிரேக்.. தமிழ்நாட்டில் இன்று முதல் 25ஆம் தேதி வரை.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

Chennai corporation budget: ரூ.5,145.52 கோடி பட்ஜெட்.. மேயர் பிரியா வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

news

பொது இடங்களில் உள்ள திமுக கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றுங்கள்.. அமைச்சர் துரைமுருகன் உத்தரவு

news

நண்பா நீ விளையாடு.. நான் அம்பயரிங் பண்றேன்.. IPL Umpire ஆன விராட் கோலியின் டீம் மேட்!

news

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுங்க: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!

news

Chennai MTC.. ஏசி பஸ் உட்பட அனைத்து பேருந்துகளிலும்.. இனி ரூ.2000/- மாதாந்திர சலுகை பாஸ்!

news

தெரு நாய்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை .. மேயர் பிரியாவுக்கு கார்த்தி சிதம்பரம் கோரிக்கை

news

முடிந்தது 9 மாத தவிப்பு.. தரையிறங்கிய டிராகன்.. புன்னகையுடன் பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்