பிச்சுக்கிட்டுக் கொட்டும் அதிர்ஷ்டம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு அடித்த ஜாக்பாட்!

Jun 13, 2024,06:11 PM IST
அமராவதி: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு  நாயுடு குடும்பத்தினரால் நடத்தப்படும் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவன பங்குகளின் மதிப்பு, லோக்சபா மற்றும் ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் சந்தித்த ஏற்றத்தால் அவரது குடும்பம் ரூ.1,225 கோடி லாபம் ஈட்டியுள்ளதாம்.

ஆந்திரா சட்டப்பேரவை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளில் வென்றுள்ளது. இதனையடுத்து ஆந்திர மாநிலத்தின் முதல்வராக சந்திரபாபு நாயுடு முதல்வராக நேற்று பதவியேற்றுள்ளார். சந்திரபாபு நாயுடு 4வது முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார். பதவி ஏற்பு விழாவிற்கு பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும்  வந்திருந்தனர்.



இந்நிலையில், சந்திரபாபு குடும்பத்தினரால் நடத்தப்படும் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு அதிரடியாக உயர்ந்துள்ளது. ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனம் கடந்த 1992ல் தொடங்கப்பட்டது. தயிர், நெய், பனீர் உள்ளிட்ட பால்பொருட்களை விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். தற்போது ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின்  பங்குகள் அதிகளவில் உயர்ந்துள்ளன. இதனால் அந்நிறுவனத்தில் 35.7 சதவீத பங்குகளை வைத்திருக்கும் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்கு மதிப்பு மும்பை பங்குச் சந்தையில் 52 வாரத்தில் அதிகபட்சமாக ரூ.727.9ஐ எட்டியதால்  சந்திரபாபு நாயுடு குடும்பம் ரூ.1,225 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இந்நிறுவனத்தில் சந்திரபாபு நாயுடு மனைவி புவனேஸ்வரிக்கு 34.37% பங்குகளும், மகன் லோகேஷ்சுக்கு 10.82% பங்குகளும், மறுமகள் பிராமணிக்கு 0.46 சதவீத பங்குகளும், அவரது 9 வயது பேரன் தேவன்ஷூக்கு 0.06 சதவீத பங்குகளும் உள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. அந்த வகையில் சந்திரபாபு நாயுடு தேர்தலில் வெற்றி பெற்றதன் எதிரொலியாக ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்கு மதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவன்ஷ் வைத்திருக்கும் 56,075 பங்குகளின் மதிப்பு ஜூன் 3 அன்று ரூ.2.4 கோடியாக இருந்தது தற்போது அது ரூ.4.1 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது இந்தக் குட்டிப் பையன் பங்கு மதிப்பு ரூ. 4.1 கோடியாகும்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்