அதெப்படி ரஜினிகாந்த்தை விமர்சிக்கலாம்.. ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு சந்திரபாபு நாயுடு கண்டனம்

May 02, 2023,02:39 PM IST

ஹைதராபாத்: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை அவதூறாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசி விமர்சனம் செய்ததற்காக ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கு தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மறைந்த என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழா சமீபத்தில் விசாகப்பட்டனத்தில் நடந்தது. அதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். என்டிஆரையும், அவரது மருமகன் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் புகழ்ந்து பேசினார்.  இது ஆந்திராவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரபாபு நாயுடு மக்களால் நிராகரிக்கப்பட்டவர். அவரது கட்சிக்கு உயிர் கொடுப்பதற்கு ரஜினிகாந்த் முயலுகிறார் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சார்ந்த ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் கட்சியினர் ரஜினியை விமர்சித்து வருகின்றனர்.



ஜெகன் கட்சியைச் சேர்ந்த நடிகை ரோஜாவும் ரஜினியை கடுமையாக விமர்சித்துள்ளார். ஆந்திர மாநில அரசியல் குறித்து ரஜினிகாந்த்துக்குத் தெரியவில்லை. தெரியாத விஷயத்தைப் பற்றிப் பேசாமல் இருப்பதுதான் நல்லது. அவர் தெரியாமல் பேசியிருப்பதாகத்தான் நான் முதலில் நினைத்தேன். ஆனால் தெரிந்தேதான் பேசியுள்ளார். என்டிஆர் மறைவுக்கு யார் காரணமோ அவரைப் புகழ்ந்து பேசியுள்ளார். இது அதிர்ச்சியாக இருக்கிறது.

என்டிஆரை நாங்கள் கடவுளாகப் பார்க்கிறோம். அப்படிப்பட்டவரின் மரணத்திற்கு யார் காரணமோ அவரைப் புகழ்ந்து பேசியதால் ரஜினிகாந்த் மீது தெலுங்கு மக்கள் கோபமாக உள்ளனர். எதுவும்  தெரியாமல் பேசுவதை அவர் தவிர்க்க வேண்டும். இப்படிப் பேசியதால் அவரது மரியாதை கெட்டுள்ளது. அவர் அரசியலுக்கு வர மாட்டேன் என்று முடிவெடுத்து விட்டார். ஆனால் தேவையில்லாமல் அரசியல் பேசி வருகிறார் என்று சாடியிருந்தார் ரோஜா.

ரஜினியுடன் சில சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள ரோஜா, ரஜினியை கடுமையாக விமர்சித்திருப்பது சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த்தை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் விமர்சிப்பதற்கு சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ட்வீட்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு எதிராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்கள் அவதூறான, மரியாதைக் குறைவான கருத்துக்களை தெரிவித்து வருவதற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரஜினிகாந்த் சிறந்த மனிதநேயம் மிக்கவர். மிகவும் மரியாதைக்குரியவர், நேர்மைானவர். தங்க மனசுக்காரர். இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோரால் நேசிக்கப்படுபவர். ஒய்எஸ்ஆர் ஜெகன் கட்சிக் கும்பல் அவர் மீது இந்தத் திட்டமிட்ட தாக்குதலை நடத்தி வருவது, அவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பறி போவதையே உணர்த்துகிறது. அந்த வெறுப்பில்தான் இப்படிப் பேசுகின்றனர். அவர்களுக்கு மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் என்று கூறியுள்ளார் சந்திரபாபு நாயுடு.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்