சென்னை வந்தார் புரட்சி நாயகன் சேகுவாரா மகள்..நாளை பாராட்டு விழா..

Jan 17, 2023,01:45 PM IST
சென்னை: புரட்சி நாயகன் சே குவராவின் மகள் அலைடா குவரா சென்னை வந்துள்ளார்.



சே குவராவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கியூபப் புரட்சி நாயகனான சே குவரா இன்றைய இளைஞர்களுக்கும் நாயகனாக இருக்கிறார். அவரது மகள்தான் டாக்டர் அலைடா குவரா. அவர் தற்போது இந்தியா வந்துள்ளார். திருவனந்தபுரம் வந்திருந்த அவர் 2 நாள் பயணமாக சென்னை வந்துள்ளார்.

இன்றும் நாளையும் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். சென்னை வந்த அவருக்கு  விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதன்கிழமை அவருக்கு பொதுமக்கள் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும் இந்த விழாவில் திமுக எம்.பி. கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர்  கலந்து கொள்ளவுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

இப்பூலோகமே கொண்டாடும் பெண்மை வாழ்க!

news

கள்ளமில்லா புன்னகையால் .. கவர்ந்து இழுக்கும் காந்த புயல்கள்

news

நீர்,நிலம், காற்று.. ஆகாயம் அவள் விழி அசைவில்...!

news

வலிகள் நிறைந்த வார்த்தைகளோடு.. தேசிய பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?