பார்முலா 4 கார் ரேஸ்.. கண்டு களிக்க சென்னை ரெடி.. போக்குவரத்து மாற்றங்களை நோட் பண்ணுங்க!

Aug 30, 2024,06:54 PM IST

சென்னை: தமிழ்நாடு  விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக ஃபார்முலா-4 கார் பந்தய நிகழ்வு இன்று முதல் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு சென்னையின் முக்கிய  சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது..

தமிழ்நாட்டு விளையாட்டுத்துறை சார்பில் சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தய நிகழ்வு நாளை முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகை இன்று நடைபெறுகிறது. இந்த கார் பந்தயம் நடைபெறும் ஓடுதளம்  தீவுத்திடலையொட்டியகொடி மரச்சாலையில் தொடங்கி ஓமந்தூரார் அரசினர் தோட்டம் வரையிலான அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவுச் சின்னம் ஆகியவற்றை உள்ளடக்கி 3.5 கிலோ மீட்டர் நீளத்தில் வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை காண 8000 பேர் வரை அமரும் வகையில் தகுந்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

ஃபார்முலா 4 கார் பந்தயம் இன்று முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை அதாவது மூன்று நாட்கள் நடைபெற உள்ளதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:





தெற்கிலிருந்து வரும் வாகனங்கள்:

காமராஜர் சாலையில் - போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை அண்ணாசாலை பெரியார் சிலை சென்ட்ரல் லைட் பாயிண்ட் ஈ வி ஆர் சாலை வழியாக சென்றடையலாம்.

மவுண்ட் ரோடில் - வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயிண்ட் நோக்கி திருப்பி விடப்படும் . சிவானந்தா சாலை மற்றும் கொடிமரச் சாலை முற்றிலும் மூடப்படும்.

வடக்கு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள்:




காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்த வித போக்குவரத்து மாற்றமும் இல்லை. சென்ட்ரல் லைட்டில் இருந்து அண்ணா சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்லலாம்.  


பல்லவன் சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை ஒரு வழி பாதையானது தற்காலிக இருவழிப்பாதை ஆக்கப்படும். முத்துச்சாமி சந்திப்பிலிருந்து அண்ணா சாலை மற்றும் கொடிமரச் சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அதற்கு பதிலாக பல்லவன் சாலை இவிஆர் சாலை சென்ட்ரல் ரயில்வே நிலையம் பெரியமேடு காந்தி இர்வின் வழியாக சென்று தாங்கள் சேர வேண்டிய இலக்கை அடையலாம்.




கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்கள்

தீவு திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகள் வாலாஜா சாலை அண்ணா சாலை காமராஜர் சாலை இ வி ஆர் சாலை ஆர் ஏ மன்றம் முத்துசாமி பாயிண்ட் பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் கனரக வாகனங்கள் மற்றும் இலகு ரக வணிக வாகனங்கள் செல்ல நண்பகல் 12 படி முதல் 22 மணி வரை தற்காலிக தடை செய்யப்பட்டுள்ளன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

பொது சாலைகளில் பார்முலா 4 கார்ப் பந்தயம் நடைபெறுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்பதால், இந்த சென்னை கார் ரேஸ் புதிய வரலாறு படைக்கிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்