சென்னையில்.. பார்ட் பார்ட்டாக வச்சு செய்த திடீர் கன மழை!

Oct 06, 2023,04:15 PM IST
சென்னை: சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் பகுதி பகுதியாக கன மழை வெளுத்தெடுத்ததால் மக்கள் குழம்பிப் போய் விட்டனர். மழை பெய்து ஓய்ந்த இடங்களில் இப்போது சுள்ளென்று வெயில் அடித்து வருவதால் மக்கள் இன்னும் குழப்பமாகி விட்டனர்.

வழக்கமாக சென்னையில் ஏப்ரல் முதல் ஜூன் ஜூலை வரைதான் நல்ல வெயில் அடிக்கும். ஆனால் இந்த முற அக்டோபரிலும் வெயில் வெளுத்தெடுக்கிறது. திடீர் திடீரென மழையும்  பெய்வதால் பல்வேறு பருவ கால நோய்கள் பரவி வருகின்றன.



இந்த நிலையில் சில நாட்களாக ஓய்ந்திருந்த மழை இன்று திடீரென எட்டிப் பார்த்தது. நகரிலும், நகரின் புறநகர்ப் பகுதிகளிலும் விட்டு விட்டு திடீர் கனமழை கொட்டித் தீர்த்தது.   காலையில் சுள்ளென்று அடித்த வெயிலின்  தாக்கம்  குறையும் பொருட்டு மதியமத்திற்கு மேல் நல்ல கனமழை பெய்தது.

கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, தி.நகர், மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்ததது. அதேபோல தாம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதேபோல இன்று முதல் அடுத்த 8 நாட்களுக்கு தமிழகம் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இந்த மழை பொழிவு ஏற்பட்டது. கடந்த 2 நாட்களாக சென்னையில் பகலில் நல்ல வெயிலும், இரவில் மழையும் பெய்து வந்த நிலையில், இன்று சுட்டெரிக்கும் வெயிலுக்கு இடையில் பகலிலும் கனமழை பெய்தது.

சமீபத்திய செய்திகள்

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

இப்பூலோகமே கொண்டாடும் பெண்மை வாழ்க!

news

கள்ளமில்லா புன்னகையால் .. கவர்ந்து இழுக்கும் காந்த புயல்கள்

news

நீர்,நிலம், காற்று.. ஆகாயம் அவள் விழி அசைவில்...!

news

வலிகள் நிறைந்த வார்த்தைகளோடு.. தேசிய பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

Good touch & bad touch மட்டுமல்ல.. பெண் பிள்ளைகளுக்கு வீரக் கலைகளும் அவசியம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்