சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், சென்னை கடற்கரை முதல் தாம்பரம் ரயில் நிலையம் வரையிலான புறநகர் ரயில் போக்குவரத்து காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றும் வேலைகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பான பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதனால் அவ்வப்போது இங்கு புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் கூட தொடர்ச்சியாக சில நாட்கள் இங்கு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாளை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பீச் - தாம்பரம் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் ரயில்கள் மற்றும் திரும்பி வரும் ரயில்கள் குறித்த அட்டவணையின்படி ஓடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்படும் மின்சார ரயில்களுக்கு மாற்றாக, சிறப்பு பயணிகள் ரயில்கள், சென்னை பீச் - பல்லவாரம் - சென்னை பீச் மார்க்கத்தில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் காலை 6.15 முதல் இரவு 8.35 வரை இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}