சென்னை: தெருவில் திரியும் நாய்களுக்கு சாப்பாடு மட்டும் கொடுத்து விட்டுப் போவதால் எந்த பலனும் இல்லை. அந்த நாய்களை தத்தெடுத்து முறையாக வளர்க்க நாய் ஆர்வலர்கள் முன்வர வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மாநகரில் சமீப காலமாக நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கூட ரேபிஸ் தாக்கிய நாய் ஒன்று 29 பேரைக் கடித்து காயப்படுத்தியது. அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. நாய்க்கு ரேபிஸ் தாக்கியிருந்ததால், இந்த 29 பேருக்கும் 5 ஊசிகள் போட பரிந்துரைக்கப்பட்டது.
நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து நாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை செய்யும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் கூறுகையில், சென்னையில் கடந்த 2018ம் ஆண்டு நாய்களின் எண்ணிக்கை குறித்த சென்சஸ் எடுக்கப்பட்டது. மீண்டும் அந்த சென்சஸ் எடுக்கவுள்ளோம். நாளை முதல் அது தொடங்குகிறது.
நாய்க்கடி பிரச்சினையைத் தடுக்க ஒரே வழி அவற்றுக்கு கருத்தடை செய்வதே. அதேசமயம், இதை எல்லா நாய்களிடமும் செய்ய முடியாது. குறிப்பாக கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் நாய்களிடம் கருத்தடை செய்ய முடியாது. இதுபோன்று விடப்படும் நாய்கள் மூலம் நமக்கு பிரச்சினை உருவாகி விடுகிறது. ஒரு நாயானது தனது வாழ்நாளில் 500 குட்டிகள் வரை ஈணும்.
தொடர்ந்து நாய்களின் பெருக்கம் குறித்து கண்காணித்துக் கொண்டுதான் உள்ளோம். நாய்ப் பிரியர்கள், தெருவில் திரியும் நாய்களுக்கு பிஸ்கட், சாப்பாடு போன்றவற்றை கொடுப்பதோடு போய் விடுகிறார்கள். அது பலன் தராது. மாறாக அனைவரும் சேர்ந்து தெருவோர நாய்களை தத்தெடுத்து வளர்க்க முன்வர வேண்டும். அப்படிச் செய்வதால் இந்தப் பிரச்சினையை ஓரளவுக்குக் குறைக்க முடியும்.
ராயபுரத்தில் நாய் கடித்த 29 பேரும் நலமாக உள்ளார்கள். அவர்களுக்கு 2வது டோஸ் ஊசியும் போடப்பட்டு விட்டது. தொடர்ந்து அவர்களைக் கண்காணித்து வருகிறோம் என்றார் ராதாகிருஷ்ணன். கடந்த 2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட நாய் கணக்கெடுப்பின்போது சென்னை மாநகரில் 58,000 நாய்கள் இருப்பது தெரிய வந்தது. ஆனால் தற்போது அதை விட அதிகமாகவே நாய்கள் இருக்கும் என்று தெரிகிறது.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}