சென்னை: 92வது விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற்ற சென்னை மெரினா கடற்கரையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் எட்டாம் தேதி இந்திய விமானப் படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது டெல்லி உட்பட பல முக்கிய விமான தளங்களில் சாகச நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். ஆனால் இந்த வருடம் மெரினா கடற்கரையில் முதன் முதலாக விமானப்படை சாகச நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த நிகழ்ச்சி காலை 11 மணிக்கு பாராசூட் சாகசத்துடன் தொடங்கி மதியம் 1 வரை நடைபெற்றது. இதில் மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானங்களான ரபேல், தேஜாஸ் உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மூலம் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சியை நடத்தியது.
மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்த சாகச நிகழ்ச்சியை 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கண்டு களித்தனர். இதையொட்டி 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் மெரினா கடற்கரையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 4டன் பிளாஸ்டிக் பாட்டில்கள் உட்பட 18.5 டன் குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதற்காக 128 தூய்மை பணியாளர்கள் குப்பை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் அப்பகுதி முழுவதும் சுத்தப்படுத்திய பின்பு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவோர் முடிந்தவரை குப்பைகளை அப்படியே போடாமல் ஒரு பையில் போட்டுக் கொண்டு எடுத்து போய் குப்பைத் தொட்டியில் போட முயல வேண்டும்.. பொறுப்பு என்பது மாநகராட்சிக்கு மட்டும் அல்ல, துப்புறவுத் தொழிலாளர்களுக்கு மட்டும் அல்ல, தூய்மைத் தொழிலாளர்களுக்கு மட்டும் அல்ல.. நமக்கும் உள்ளது என்பதை எப்போதுமே மறக்கக் கூடாது மக்களே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை பொதுக்கூட்டம்... திடீர் என சென்னைக்கு மாற்றம்!
ஜன.,15 பொங்கல் தினத்தில் ஜனநாயகன் மேல்முறையீட்டு மனு விசாரணை
பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
2026 சட்டசபை தேர்தல்... யாருடன் கூட்டணி?... மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த்!
பழனி முருகன் கோவிலில் போராட்டம்: ஹெச். ராஜா உட்பட 12 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
தமிழர்களின் குரலை அடக்க முடியாது...ஜனநாயகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் காந்தி
தமிழக அரசின் திருவள்ளுவர் தின விருதுகள் அறிவிப்பு
புதுசு புதுசா யோசிக்கிறாங்களே...சீனாவில் உயிருடன் இருப்பதை அப்டேட் செய்ய புதிய "ஆப்"
{{comments.comment}}