சென்னை: வழக்கமான வானிலை அறிவிப்பு பாணியிலிருந்து சற்று மாறி வித்தியாசமான முறையில் முன்னறிவிப்புகளை தனது டிவிட்டர் தளத்தில் போட ஆரம்பித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். இதற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
வானிலை முன்னறிவிப்பு என்பது முன்பெல்லாம் சென்னை வானிலை மையம் கொடுப்பது மட்டுமே. டிவி சானல்கள் வந்த பிறகு, வானிலை மைய இயக்குநர்கள் வானிலை அறிவிப்புகளை பேட்டிகளாக கொடுக்க ஆரம்பித்தபோதுதான் இது மக்களைக் கவர ஆரம்பித்தது. அதிலும், ரமணன் காலத்தில்தான் இது மிகப் பிரபலமானது.
ரமணன் பேட்டி அளிக்கும்போது, நிறுத்தி நிதானமாக பயன்படுத்தும் வார்த்தைகள் மக்களிடையே பிரபலமாயின. அவரது கணிப்புகள் பல சமயத்தில் சரியாக இருந்தது. சில சமயங்களில் சொதப்பும். இருந்தாலும் ரமணன் பேச ஆரம்பித்தால் அதைக் கவனிக்கும் ஆர்வம் மக்களிடையே ஏற்பட்டது அந்த சமயத்தில்தான்.

ஆனால் தனியார் பிளாக்கர்கள் வந்த பிறகு வானிலை முன்னறிவிப்பு மற்றும் கணிப்பு வேற லெவலுக்கு மாறி விட்டது. இதில் முன்னோடி என்றால் அது தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்தான். அவரது கணிப்புகள் கிட்டத்தட்ட நூற்றுக்கு நூறு சரியாக இருக்கும் என்பதும், எளிமையாக எல்லோருக்கும் புரியும் வகையில் ஜாலியாக சொல்வதும், மக்களை பயமுறுத்தாமல் அதேசமயம், என்ன நடக்கலாம் என்பதையும் துல்லியமாக சொல்லும் அவரது பாணியும் அவருக்கு ரசிகர் கூட்டத்தையே ஏற்படுத்தி விட்டது.
இன்று நிறைய தனியார் பிளாக்கர்கள் வந்து விட்டார்கள். எல்லோரும் ஒவ்வொரு பாணியில் கலக்கிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில்தான் சமீபத்தில் நெல்லை, தூத்துக்குடி பெரும் மழை தொடர்பாக சர்ச்சை வெடித்தது. இந்திய வானிலை மையத்தின் செயல்பாடுகளை பல அரசியல் தலைவர்கள் விமர்சிக்க ஆரம்பித்தனர். அவர்களின் கணிப்புகள் இன்னும் துல்லியமாக இருக்க வேண்டும். தொழில்நுட்ப ரீதியாக நிறைய மாற வேண்டும் என்று பலரும் கூறினர்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது சமூக வலைதளங்கள் மூலம் வெளியிடும் வானிலை அறிவிப்புகளில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். வழக்கமாக பிளாக்கர்கள் பயன்படுத்துவது போன்ற வார்த்தைகளையும், டீட்டெய்லையும் சொல்லி போஸ்ட் போட ஆரம்பித்துள்ளனர். இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, மக்களுக்கும் தெளிவாக புரியும் வகையில் உள்ளதால் வரவேற்பும் கிடைத்துள்ளது.
குறிப்பாக இப்படி ஒரு டிவீட் போட்டிருந்தனர்.. அதில், " large band of rain approaching Chennai and neighbouring coastal districts. widespread light to moderate spells with isolated Intense spell (South Chennai) of rain is expected" என்று இடம் பெற்றிருந்தது. இதுபோல வெல்லாம் வழக்கமாக பிளாக்கர்கள்தான் எழுதுவார்கள். ஆனால் ஐஎம்டி போட்டுள்ள இந்த டிவீட் பலரது வரவேற்பைப் பெற்றுள்ளது.
நிச்சயம் இந்த மாற்றத்தை வரவேற்றாக வேண்டும். இப்படி விரிவாக, தெளிவாக சொல்லும்போது மக்களுக்கு தெளிவாகப் புரியும் வாய்ப்பு கிடைக்கிறது. நமக்கு மேலே என்ன நடக்கிறது என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து கொள்ள ஒரு சான்ஸ் கிடைக்கிறது. அதைத்தான் அவர்களும் எதிர்பார்க்கிறார்கள். அதைப் புரிந்து கொண்டுதான் தனியார் பிளாக்கர்களும் சிம்பிளாக சொல்கின்றனர். இதனால்தான் அவர்களது கணிப்புகளுக்கும், கூற்றுக்கும் மக்கள் அதிக கவனம் கொடுக்கிறார்கள்.
சென்னை வானிலை மையம் மிக மிக நவீனமானது என்பதில் சந்தேகமே இல்லை. அதேசமயம், இது போல மக்களுக்கேற்ற வகையில் சொல்ல ஆரம்பித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!
FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!
Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!
Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
{{comments.comment}}