சென்னை: அமெரிக்காவில் பெற்றோரை இழந்து தவித்த தமிழ்நாட்டு குழந்தை, தமிழ்நாடு அரசின் உதவியால் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பிரவீன் குமார்- தமிழ்செல்வி தம்பதியினர் அமெரிக்காவின் மிஸிஸிப்பி மாகாணத்தில் வசித்து வந்தனர். கடந்த 2022ம் ஆண்டு குடும்ப பிரச்சனைக் காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு மகன் இருந்துள்ளான். அந்த குழந்தை பஞ்சாபி தம்பதியினருக்கு தத்துக் கொடுக்கப்பட்டிருந்தது.
இதனை அறிந்த குழந்தையின் சித்தி அபிநயா உடனடியாக அமெரிக்கா சென்றுள்ளார். தத்தெடுத்த பஞ்சாபி தம்பதியினர்கள் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நடத்துவதற்கு அமெரிக்க தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் அபிநயாவிற்கு உதவியுள்ளனர். இதனிடையே அமெரிக்காவில் பெற்றோரை இழந்து தவித்த குழந்தையை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அயலக தமிழ் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், அயலக தமிழ் நல வாரிய பிரதிநிதிகள் அமெரிக்கா சென்று உரிய ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்தனர். மேலும் குழந்தையின் பாதுகாப்பிற்கு தமிழக அரசு உத்தரவாதம் அளிக்கும் என்று கடிதமும் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து குழந்தை சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்திருந்த தாத்தா மற்றும் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. 2 வருடங்களாக சட்ட போராட்டத்திற்கு பின்னர் குழந்தை மீட்கப்பட்டதால், குழந்தையை காப்பாற்ற உதவிய தமிழக அரசிற்கு குழந்தையின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}