ஹேப்பி நியூஸ்.. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. ஜனவரியில் திறக்கப்படும்.. அமைச்சர் சேகர்பாபு தகவல்

Dec 25, 2023,05:44 PM IST

சென்னை: சென்னையில் உருவாக்கப்பட்டுள்ளது இரண்டாவது ஒருங்கிணைந்த பேருந்து நிலையமான, கிளாம்பக்கம் பேருந்து நிலையம் பொங்கலை ஒட்டி, ஜனவரி மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவித்துள்ளார்.


சென்னை கோயம்பேட்டில் ஒரு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் உள்ளது. இது திமுக ஆட்சிக்காலத்தில் திட்டமிடப்பட்டு, கட்சி முடிக்கப்பட்டு,  அதிமுக ஆட்சிக்காலத்தில் திறக்கப்பட்டது. வெளியூர் செல்லும் பேருந்துகள் பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இங்கு மாற்றப்பட்டு இங்கிருந்து வெளியூர்ப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்து முனையத்துக்கு அருகிலேயே ஆம்னி பேருந்து நிலையமும் செயல்பட்டு வருகிறது.


இந்த நிலையில்,  சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விட்டதைத் தொடர்ந்து தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்தைக் கட்டி அங்கிருந்து இயக்க புதிய பேருந்து முனையம் கட்ட கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.




86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 400 கோடியே மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்குத் தயாராகிய நிலையில் மழை நீர் வடிகால் வசதிகள் சரியாக மேற்கொள்ளப்படாதது தெரிய வந்து திறப்பு விழா தாமதமானது. அந்தப் பணிகள் தற்போது சரி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது அனைத்துப் பணிகளும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதால் பேருந்து நிலையத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


இன்று இப்பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் தா.மோ அன்பரசன்  இன்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வை முடித்துவிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், பேருந்து நிலையத்தை தொடங்கினோம்.. முடித்தோம்.. என இல்லாமல் தொடர்ந்து பேருந்து நிலையத்திற்கு வரும் மக்களுக்காக அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் மேற்கொள்ள இருக்கிறோம். 




இவ்வளவு பணி சுமை வந்ததற்கு காரணம் கடந்த ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லாதது தான். இதற்கு தேவையான கட்டமைப்புகள் இயற்கை பேரழிவால் ஏற்பட்ட பெருவெள்ளம், கொரோனாவால் ஏற்பட்ட நோய் தொற்று போன்ற சூழ்நிலைகளால் பேருந்து நிலையத்தின் பணிகளை முடிக்க காலதாமதம் ஏற்பட்டது. தற்போது இதனை சவாலாக எடுத்துக்கொண்டு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.


வெகு விரைவில் தமிழ் புத்தாண்டு அன்று பொதுமக்கள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்துவார்கள். முடிந்த அளவு காவல்துறையுடன் ஒருங்கிணைந்து ஆய்வுகளை நடத்தினோம். அனைத்து வகையிலும்  ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும்படி திட்டமிட்டுள்ளோம்.




கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்போது தினசரி 2,310 பேருந்துகள் இயக்கப்படும். 840 ஆம்னி  பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்றார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு.

சமீபத்திய செய்திகள்

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்