சென்னை: சென்னையில் கன மழை பெய்து கொட்டித் தீர்த்த போதிலும் கூட சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மொத்தமாக 50 சதவீத அளவு கூட நீர் இருப்பு இல்லை என்பது கவலை அளிப்பதாக உள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வந்தது. அதிலும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை பெருமளவில் கன மழை பெய்தது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு போதிய நீர் வரத்து இருக்கும் என நம்பப்பட்டது. ஆனால் இந்த மழை போதுமானதாக இல்லை. இன்று காலை 8 மணி நிலவரப்படி சென்னைக்குக் குடிநீர் வழங்கும் 6 ஏரிகளிலும் மொத்த நீர் இருப்பு 41.57 சதவீதமாகவே உள்ளது. இதில் ஒரு ஏரியானது வீராணம் ஏரி. இது கடலூர் மாவட்டத்தில் உள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் உள்ள நீர் இருப்பு நிலவரம்:
1. பூண்டி நீர்த்தேக்கம்
மொத்த கொள்ளளவு - 35 அடி (3231 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 21.38 அடி (381 மில்லியன் கன அடி)
2. செங்குன்றம்
மொத்த கொள்ளளவு - 21.20 அடி (3300 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 16.57 அடி (2326 மில்லியன் கன அடி)
3. சோழவரம்
மொத்த கொள்ளளவு - 18.86 அடி (1081 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 3.98 அடி (162 மில்லியன் கன அடி)
4. செம்பரம்பாக்கம்
மொத்த கொள்ளளவு - 24 அடி (3645 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 13.61 (1286 மில்லியன் கன அடி)
5. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை
மொத்த கொள்ளளவு - 3661 அடி (500 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 30.35 அடி (305 மில்லியன் கன அடி)
6. வீராணம் ஏரி
மொத்த கொள்ளளவு - 8.50 அடி (1456 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 6.75 அடி (1030 மில்லியன் கன அடி)
90 அணைகளின் நீர் மட்ட விவரம்
தமிழ்நாடு முழுவதும் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் மேட்டூர், பவானிசாகர், முல்லை பெரியார், வைகை அணை, பரம்பிக்குளம் என 90 அணைகள் உள்ளன. 90 அணைகளின் மொத்த கொள்ளளவு 2,24,297 மில்லியன் கன அடி ஆகும். இதை டிஎம்சி கணக்கில் சொன்னால், 224.297 டிம்சி ஆகும். இன்று காலை நிலவரப்படி 1,33,661 மில்லியன் கன அடி அதாவது 133.661 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.
120 அடி முழு கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர் இருப்பு 92 அடியாக உள்ளது. அதாவது 54.965 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1616 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 105 அடி கொண்ட பவானிசாகர் அணையில் 88.31 அடி நீர் இருப்பு உள்ளது.
வைகை அணை நீர் மட்டம்
கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்திலும், தேனி மாவட்டத்திலும், வைகை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக வைகை அணையிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி 71 அடி முழு கொள்ளளவு கொண்ட வைகை அணையில் நீர் இருப்பு 6,091 டிஎம்சி ஆக உள்ளது.
ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள அணைகளில் கிட்டத்தட்ட 60 சதவீத அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. எனவே வரும் நாட்களில் அதிக அளவிலான மழைப் பொழிவு இருக்கும் பட்சத்தில் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி அடுத்து வரும் காலத்திற்கு விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்கு போதிய நீர் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}