Chennai Lakes: நீர் இருப்பு.. கடந்த வாரத்தை விட லேசாக அதிகரிப்பு.. நவம்பர் மழைக்கு வெயிட்டிங்!

Oct 28, 2024,01:08 PM IST

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன் கோட்டை ஆகிய ஐந்து ஏரிகளில் கடந்த வாரம் 50 சதவிகிதம் வரை நீர் இருப்பு இருந்த நிலையில் தற்போது அதை விட சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும் வரும் நாட்களில் மழை குறைந்தால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதேசமயம், நவம்பர் மாதத்தில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுவதால் நீர் இருப்பு மேம்படும் என்ற நம்பிக்கையில் நீர்வளத்துறை அதிகாரிகள் உள்ளனர்.


மத்திய வங்க கடல் பகுதிகளில் உருவான டானா புயல்  காரணமாக, வட தமிழகமான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நல்ல மழை பெய்தது. குறிப்பாக ஏரிகள் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. 




இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய நீர் இருப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன் கோட்டை ஆகிய ஐந்து ஏரிகளில்,  இன்று காலை 8 மணி நிலவரப்படி மொத்தம் 41.33 சதவிகித அளவுக்கு நீர் இருப்பு உள்ளது.


சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில்  எவ்வளவு நீர் இருப்பு உள்ளது  என்ற விவரம் பின்வருமாறு:


1. பூண்டி நீர்த்தேக்கம்:


மொத்த கொள்ளளவு - 35 அடி (3231 மில்லியன் கன அடி)


நீர் இருப்பு - 21.96 அடி (452 மில்லியன் கன அடி)


2.செங்குன்றம்


மொத்த கொள்ளளவு - 21.20 அடி (3300 மில்லியன் கன அடி)


நீர் இருப்பு - 17.40 அடி (2485 மில்லியன் கன அடி)


 3. சோழவரம் 


மொத்த கொள்ளளவு - 18.86 அடி (1081 மில்லியன் கன அடி) 


நீர் இருப்பு - 2.50 அடி (118 மில்லியன் கன அடி)


4. செம்பரம்பாக்கம்


மொத்த கொள்ளளவு - 24 அடி (3645 மில்லியன் கன அடி)


நீர் இருப்பு - 14.77 (1490 மில்லியன் கன அடி)


5. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை: 


மொத்த கொள்ளளவு - 3661 அடி (500 மில்லியன் கன அடி)


நீர் இருப்பு - 30.67 அடி ( 314 மில்லியன் கன அடி)


மேட்டூர் அணை நீர் மட்டம்: 


டானா புயல் காரணமாக கர்நாடக மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவிரி அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்து மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வந்தது. 120 அடி முழு கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர் இருப்பு 107.45 அடியாக உள்ளது. அதாவது  74,959 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.


90 அணைகளின் நீர் நிலவரம்: 




தமிழ்நாடு முழுவதும் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் மேட்டூர், பவானிசாகர், முல்லை பெரியார், வைகை அணை, பரம்பிக்குளம் என 90 அணைகள் உள்ளன. 90 அணைகளின் மொத்த கொள்ளளவு 2,24,297 மில்லியன் கன அடி ஆகும். இதை டிஎம்சி கணக்கில் சொன்னால், 224.297 டிம்சி ஆகும். இன்று காலை நிலவரப்படி 1,63,066 மில்லியன் கன அடி அதாவது 163.066 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.


நவம்பர் மாதத்தில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதால் அனைத்து அணைகள், நீர்த்தேக்கங்களிலும் நீர் இருப்பு மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் அதிகாரிகள் உள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரமிக்க வைக்கும் பிரண்டை துவையல்.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 3)

news

வசந்த நவராத்திரி!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

ஆங்கிலேயர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய.. நாயகன்.. சுபாஷ் சந்திர போஸ்!

news

உங்க வாழ்க்கையே ஆதாரமாகட்டும்.. Let Your Life Be the Proof

news

நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்