சென்னை: விஐபிக்கள் அரசியலுக்கு வந்தால் சரமாரியாக பிரச்சினைகள் வரும் என்பார்கள். ஆனால் நடிகர் விஜய்க்கு, கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய உடனேயே பல்வேறு வகையான விமர்சனங்கள், புகார்கள், போலீஸ் நிலையத்தில் வழக்கு என்று கிளம்பி விட்டன சவால்கள். இந்த புகார்களை தகர்த்தெறிந்து சாதனை படைப்பாரா என விஜய் ஆதவாளர்கள் பெருத்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், நேற்று தனது கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். சிவப்பு மஞ்சள் நிறத்திலான அந்தக் கொடியில் இரட்டையானைகளும் வாகை மலரும் இடம் பெற்றுள்ளன. இந்த கொடியை வைத்து இப்போது பலரும் அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக கட்சி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய். அப்போது தான் கமிட்டான படங்களில் நடித்து முடித்துவிட்டு தீவிர அரசியல்வாதியாக களமிறங்கி 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இக்கட்சி தொடர்பான பணிகளை முழுவீச்சில் செய்து வருகின்றனர். அந்த வரிசையில்தான் நேற்று கட்சி கொடி அறிமுகமானது. இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் கட்சிப் பாடலையும் வெளியிட்டார். இந்தப் பாடல் பல்வேறு தரப்பு மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி குறித்து விஜய் மீது சென்னை கொருக்குப்பேட்டை செல்வம் என்பவர் போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சிக் கொடியில் பல்வேறு விதி மீறல்கள் உள்ளன. கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சின்னம் இதில் இடம் பெற்றுள்ளது. அதேபோல, ஸ்பெயின் நாட்டின் தேசிய சின்னம், ஈழத் தமிழர்களின் வாகை மலர் ஆகியவற்றையும் தவறாக பயன்படுத்தியுள்ளனர். விலங்குகளை தேர்தல் சின்னமாக பயன்படுத்துவது விதிகளுக்குப் புறம்பானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
எனவே நடிகர் விஜய் கட்சியின் கொடிக்குத் தடை விதிக்க வேண்டும். விதிமுறைகளை மீறிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வம் தனது புகாரில் கூறியுள்ளார்.
ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சியும் விஜய் கட்சி கொடிக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னம் யானை. இக்கட்சியின் கொடியில் நீல நிறத்தில் யானைகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் விஜயின் தவெக கட்சிக் கொடியில் யானை சின்னம் இடம்பெற்றுள்ளது. அதனால் யானை சின்னத்தை உடனடியாக நீக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி மனு கொடுக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}