மக்களே உஷாராகுங்க.. தமிழ்நாட்டில் இன்று முதல்.. அடுத்த 3 தினங்களுக்கு வெயில் அதிகரிக்குமாம்..!

Mar 07, 2025,07:49 PM IST

சென்னை: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை  3 டிகிரி வரை உயரக்கூடும் எனவும், வட தமிழக பகுதிகளில் ஒரு சில இடங்களில் 4 டிகிரி வரை உயரக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதேபோல் வரும் மார்ச் 11ஆம் தேதி ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நேற்று மட்டும் ஏழு இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 102.56 பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. அதே போல் கரூரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட்டும், மதுரை, திருப்பத்தூர், வேலூர், ஆகிய இடங்களில் 101 டிகிரி ஃபாரன்ஹீட்டும்,சேலம் மற்றும் திருச்சியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.



இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதன்படி , தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். குறிப்பாக வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட மூன்று முதல் நான்கு டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க கூடும். சென்னையில் அதிகபட்சமாக நாளை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

11ஆம் தேதி கனமழை:

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், ஆகிய ஆறு மாவட்டங்களில் மார்ச் 11ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மிதமான மழை: 

தமிழ்நாடு, புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்