சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த வான்வெளி சாகச நிகழ்ச்சியைக் கண்டு களித்த லட்சக்கணக்கான மக்களும் தற்போது வீடு திரும்பி வருவதால் ரயில் நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கித் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இன்று விமானப்படை சார்பில் வான்வெளி சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. முற்பகல் 11 மணியிலிருந்து 1 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக் கிட்டத்தட்ட 15 லட்சம் மக்கள் மெரீனா கடற்கரையில் குழுமி கண்டு மகிழ்ந்தனர். மக்களின் வசதிக்காக கூடுதல் ரயில், எம்ஆர்டிஎஸ், மெட்ரோ மற்றும் பஸ்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இது போதவில்லை.

குறிப்பாக மெட்ரோ ரயில் நிலையங்களிலும் எம்ஆர்டிஎஸ் எனப்படும் மாடி ரயில்களிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதியது. இதையடுத்து தற்போது மெட்ரோ சேவையானது 3 நிமிடத்திற்கு ஒரு ரயில் என்ற அளவில் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வண்ணாரப்பேட்டை மற்றும் ஏஜி டிஎம்எஸ் இடையே 3.5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது. அதேபோல விம்கோநகர் - ஏர்போர்ட் மெட்ரோ இடையே 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்டிரல் மெட்ரோ - புனித தாமஸ் மலை இடையிலான சேவை வழக்கம் போல 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டது. கூட்ட நெரிசல் நிலவும் வரையில் இந்த நேர மாற்றம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}