குடிநீர்த் தேவையா.. மெட்ரோ வாட்டர் வேண்டுமா.. லாரி புக் பண்ணுங்க..!

Apr 26, 2023,02:53 PM IST
சென்னை: சென்னை மாநகரில் வெயில் காலத்தில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படுவது வழக்கம். இதுபோல குடிநீர்த் தேவை உள்ளோருக்காக மெட்ரோ வாட்டர் நிறுவனம் சில சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

விவேக் படத்தில் ஒரு வசனம் வரும்.. ஒருத்தன் முட்டாப் பீஸு.. இன்னொருத்தன் முரட்டுப் பீஸு.. அதேபோலத்தான் சென்னைக்கும் இதேபோல இரண்டு அடையாளங்கள்தான். ஒன்று மழையால் வரும் வெள்ளம்.. இரண்டாவது வெயில் காலத்தில் குடிநீருக்குப் பஞ்சம். இதில் சில நேரம் இரண்டு பிரச்சினையும் வராமல் தப்பும் வருடங்களும் உண்டு.

கடந்த ஆண்டு மழை பெரிய அளவில் பாதிப்பைத் தராமல் போய் விட்டது. அதேபோல இந்த வெயில் காலத்தையும் பாதிப்பில்லாமல் கடக்க மக்கள் ஆசைப்படுகின்றனர். இதுவரை தண்ணீர்ப் பிரச்சினை வரவில்லை. இனியும் வராமல் இருக்க வேண்டும் என்று மக்கள் வேண்டிக் கொண்டுள்ளனர்.



இந்த நிலையில் சென்னை நகரில் மக்களுக்கு குடிநீர்த் தேவை என்றால் உடனடியாக மெட்ரோ வாட்டர் லாரியை புக் செய்யலாம் என்ற அருமையான வாய்ப்பை மெட்ரோ வாட்டர் நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக இணையதளம் மூலம் புக் செய்து தண்ணீரைப் பெறலாம்.

6000 லிட்டர் தண்ணீருக்கு வீடு என்றால் ரூ. 475 என்றும், வணிகப் பயன்பாட்டுக்கு என்றால் ரூ. 735 கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல 9000 லிட்டர் தண்ணீர் என்றால் வீட்டுக்கு ரூ. 700ம், வணிகப் பயன்பாட்டுக்கு ரூ. 1050ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  16,000 லிட்டர் என்றால் வீட்டுக்கு ரூ. 1200ம், வணிகப் பயன்பாட்டுக்கு ரூ. 1785ம் கட்டணம் செலுத்த வேண்டும்.

தண்ணீர் வேண்டுவோர் பதிவு செய்ய வேண்டிய இணையதளம்: https://cmwssb.tn.gov.in/

காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த இணையதளத்தில் போய் பதிவு செய்து கொள்ளலாம்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்