பயணிகளின் கவனத்திற்கு.. மேலும் 66 தாழ்தள பேருந்துகள் வந்தாச்சு.. ஜஸ்ட் என்ஜாய் மக்களே!

Sep 27, 2024,04:26 PM IST

சென்னை: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏற்கனவே 58 தாழ்தளப் பேருந்துகள் இயங்கி வரும் நிலையில் தற்போது கூடுதலாக 66 தாழ்தளப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோரின் நலனுக்காகவே இந்த தாழ்தளப் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எளிதாக ஏறி இறங்கும் வகையில் இந்தப் பேருந்துகளில் படிகள் உள்ளதால் வயதானவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இது உபயோகமாக உள்ளது. இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த தாழ்தளப் பேருந்துகள் தற்போது மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. பழையப் பேருந்துகளுக்குப் பதில் புதிய பேருந்துகளை வாங்கி மாநகரப் போக்குவரத்துக் கழகம் புழக்கத்தில் விட்டுள்ளது.



முதல் கட்டமாக 58 தாழ்தளப் பேருந்துகள் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் தற்போது கூடுதலாக 66 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதிய தாழ்தளப் பேருந்துகள் எந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன என்ற விவரத்தையும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி அதிகபட்சமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் டூ பிராட்வே ரூட்டில் 10 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அம்பத்தூர் எஸ்டேட் - வேளச்சேரிக்கு 5, தாம்பரம் - செங்குன்றம் 5,  டோல்கேட் - திருவான்மியூர் 8, திருவொற்றியூர் - பூந்தமல்லி 2, கோயம்பேடு பஸ் நிலையம் - கிளாம்பாக்கம் 9, கோயம்பேடு பஸ் நிலையம் - அண்ணா சதுக்கம் 5, தாம்பரம் - ஸ்ரீபெரும்புதூர் 5, தாம்பரம் - மாமல்லபுரம் 5, வடபழனி - கூடுவாஞ்சேரி 6, பிராட்வே - கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 6 என பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் இந்த தாழ்தளப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் வசதிக்காகவே தனியாக ரேம்ப் வசதி உள்ளது. வீல் சேரில் வருபவர்கள் இதன் மூலமாக ஈஸியாக பஸ்சுக்குள் ஏற முடியும். பஸ்சிலிருந்து இறங்கவும் முடிவதால் இதுபோன்ற மாற்றுத்திறனாளி பயணிகளுக்கும் இந்த பேருந்து மிகவும் வசதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்