சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் மீது நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனியார் யூடியூப் சானலுக்கு அளித்த பேட்டியின்போது லியோ படத்தின் நாயகி திரிஷா குறித்து வில்லனாக நடித்த மன்சூர் அலிகான் சில கருத்துக்களைக் கூறியிருந்தார். அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. திரிஷா தவிர, குஷ்பு, ரோஜா உள்ளிட்டோர் குறித்தும் அவர் பேசியிருந்தார். அவை முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருந்ததால் கடும் கண்டனங்கள் குவிந்தன.
மன்சூர் அலிகானுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் என்று பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தை தானாக முன்வந்து கையில் எடுத்தது. மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி சங்கர் ஜுவாலுக்கு ஆணையம் கடிதம் அனுப்பியது.
இந்த நிலையில் தற்போது சென்னை நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 பிரிவுகளின் கீழ் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா கிருஷ்ணன் என்பவர் குறித்து கன்னியத்தை குறைக்கும் வகையில் மிகவும் அநாகரிகமான முறையில் அவமானப்படுத்தி, பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் (X-Twitter) பரவியது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் பேரில் சென்னை பெருநகர காவல் W-1 ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று (21.11.2023) நடிகர் மன்சூர் அலிகான் மீது 354 (A), 509 இதச ஆகிய 2 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக அடுத்து மன்சூர் அலிகான் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று தெரிகிறது. அவர் கைது செய்யப்படுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
பேசியது தப்பு.. மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும்.. பாரதிராஜா அதிரடி
"நடிகர் சங்கத்துக்கு 4 மணி நேரம் டைம் தர்றேன்".. அதிர வைத்த மன்சூர் அலிகான்!
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
{{comments.comment}}