சென்னை: "நீ உலகத்தோட எந்த மூலைக்குப் போனாலும்.. உன்னை பிடிச்சு இழுத்து வந்து ஜெயில்ல அடைப்பேன்டா" என்று சிங்கம் படத்தில் சூர்யா சவால் விட்டு பிடித்து வருவார் இல்லையா.. அதை நிஜமாக்கியுள்ளது சென்னை போரூர் போலீஸ்.
ஒரு வீட்டில் கொள்ளையடித்து விட்டு கடந்த 30 வருடமாக தலைமறைவாக இருந்து வந்த திருடனை இத்தனை காலம் கழித்து போரூர் போலீஸார் சூப்பராக பிடித்து அசத்தியுள்ளனர். சென்னை போலீஸ் மொத்தமும் ஆச்சரியமடைந்துள்ளனர் இந்த அதிரடியைப் பார்த்து.
1993ம் ஆண்டு... போரூரில் உள்ள இப்ராகிம் ஷா என்பவரின் வீட்டில் இரவில் ஒரு கும்பல் உள்ளே புகுந்தது. மொத்தம் 4 பேர் அதில் இருந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த 30 பவுன் நகை, 15,000 ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தலைமறைவாகி விட்டனர்.
இந்த துணிகர திருட்டு தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். மொத்தம் நான்கு பேர் திருடியது தெரிய வந்தது. அதில் முத்து, மகேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்ற இருவர் குறித்து தெரியவில்லை. இருப்பினும் அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து வந்தது.
இந்த நிலையில் பெரும்பாக்கம் பகுதியில் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய சக்திவேல் என்பவர் வசித்து வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் பெரும்பாக்கம் பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு வைத்து சக்திவேலை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின்போது அவர்தான் இப்ராகிம் ஷா வீட்டில் கொள்ளையடித்த நபர் என்பது உறுதியானது.
இதையடுத்து அவரை கைது செய்துள்ளனர். கிட்டத்தட்ட 30 வருடம் கழித்து ஒரு கொள்ளை வழக்கில் தொடர்புடைய நபரை போலீஸார் பிடித்திருப்பது சென்னை காவல்துறையை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தப்பு செய்து விட்டு எங்கே போனாலும் தப்ப முடியாது.. சட்டம் ஓடி வந்து அள்ளிக் கொண்டு போகும் என்பதையே இது காட்டுகிறது.
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}