ஆம்ஸ்ட்ராங் கொலையில் .. அரசியல் - தென் மாவட்ட தொடர்பு இல்லை.. போலீஸ் கமிஷனர் சந்தீப் ரத்தோர்

Jul 06, 2024,05:34 PM IST
சென்னை: பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் பின்னணி எதுவும் இல்லை. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர அனைத்து நடவடிக்கைகளையும் போலீஸ் தரப்பில் எடுக்கப்பட்டு வருகிறது என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ரத்தோர் கூறியுள்ளார்.

பகுசன் சமாஜ்  மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களுக்கு பேட்டி மூலம் விவரித்தார். அவரது பேட்டியிலிருந்து:

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய 10 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஆம்ஸ்ட்ராங் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியதாக போலீசுக்கு தகவல் தெரியவந்தது. சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக சென்ற காவல்துறையினர் ஆம்ஸ்ட்ராங்கை  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கொலை நடந்த மூன்று மணி நேரத்திற்குள் எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட எட்டு பேரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறது. பொன்னை பாலு, அருள், மணிவண்ணன் ராமு உள்ளிட்ட எட்டு பேர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிற குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை: 



ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளையும் கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் உள்ளது. தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆம்ஸ்ட்ராங் இறுதிச் சடங்கு முடியும் வரை தேவையான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம், பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அரசியல் காரணங்கள் இல்லை:

விசாரித்த வரையில் ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை.கொலைக்கானபிண்ணணியில் அரசியல் காரணங்கள் இருப்பதற்கு மிக மிக வாய்ப்பு குறைவு.ஆனால் கொலைக்கான பின்னணி குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறை எடுத்து  வருகிறது. விசாரணையில் கிடைத்த தகவலை மட்டும் கூறியுள்ளோம். முழுமையான விசாரணக்கு பிறகே கொலைக்கான காரணம் குறித்த தகவல் வெளியிடப்படும். இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள எட்டு பேர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை செய்யப்பட்ட எட்டு பேரில் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை.

ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீசுக்கு எந்த தகவலும் இல்லை. ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் என்ற அடிப்படையில்தான் அவரது நடமாட்டத்தை உளவுத்துறை கண்காணித்து வந்தது.தேர்தல் நடத்தை விதி காரணமாக போலீசில் ஒப்படைத்த துப்பாக்கியை ஆம்ஸ்ட்ராங் ஜூன் 13ஆம் தேதி திரும்ப பெற்றுவிட்டார். 

போலீஸ் பாதுகாப்பு:

ஆம்ஸ்ட்ராங் இறுதிச் சடங்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளன. ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள அரசு பள்ளியிலும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 769 பேர் மீது குண்டர் சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் 1192  பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 1192 பேரில் 666 பேர் ரவுடிகள். ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஆம்ஸ்ட்ராங் மீது ஏழு வழக்குகள் இருந்தன. அனைத்து வழக்குகளிலும் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரம் சென்னை தான் என தேசிய குற்ற ஆணை பதிவக தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பு குற்றங்களை தடுப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு சென்னை போலீஸ் செயல்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்