சென்னை: வீட்டில் பணிபுரிந்த முன்னாள் ஊழியரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் பார்வதி நாயர். தொடர்ந்து உத்தமவில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் போன்ற படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் பார்வதி நாயர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் வீட்டில் இருந்த 10 லட்சம் மதிப்புள்ள, விலையுயர்ந்த பொருட்களான கைக்கடிகாரம், லேப்டாப், வாட்ச் போன்றவை திருட்டுப் போனதாக புகார் அளித்திருந்தார். மேலும் தன் வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் மீது சந்தேகம் இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே சுபாஷ் நடிகை பார்வதி நாயர் உள்ளிட்ட ஏழு பேர், தன்னை தாக்கியதாக புகார் அளித்தார். ஆனால் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக சுபாஷ் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், சுபாஷ் அளித்த புகாரின் அடிப்படையில், பார்வதி நாயர், கொடம்பாடி ராஜேஷ், இளங்கோவன் செந்தில், அருள்முருகன், அஜித் பாஸ்கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன்படி மேற்கண்டோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}